மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தற்போதைய நிலவரம் என்ன?

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், அதிமுக கூட்டணியில் தேமுதிமு சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்றுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.