“கனடாவின் குற்றச்சாட்டு அரசியல் பின்னணி கொண்டது” – இந்திய வெளியுறவுத்துறை

இந்தியாவில் இருக்கும் கனடா அரசின் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரின் குற்றச்சாட்டில் முன்முடிவு தெரிவதாகவும் இது முற்றிலும் அரசியல் பின்னணி கொண்டது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தக் குற்றச்சாட்டு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களைப் பார்க்கத் தயாராக இருப்பதாக கனடா அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும் இதுவரை அத்தகைய குறிப்பிட்ட தகவல்கள் எதையும் தாங்கள் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.

அதேவேளையில் கனடா மண்ணில் நடக்கும் குற்ற நடவடிக்கைகள் மற்றும் அதில் தொடர்புடைய தனிநபர்கள் பற்றிய தெளிவான தகவல்கள் சீரான கால இடைவெளியில் அந்நாட்டு அரசுக்கு இந்தியா தரப்பில் இருந்து வழங்கப்பட்டதாகவும் அரிந்தம் பக்சி குறிப்பிட்டார்