தமிழ்நாடு – இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த விஜயமானது மிகவும்
முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம்
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.