ஆரோக்யமான பொருளாதாரத்துக்கான குறியீடுகள் என்ன?
வாங்கும் கடனுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் இடையில் தேவையான சமநிலை நீடிக்கிறதா என்பதை கடன் – வளர்ச்சி சதவீதம் (Debt-GDP ratio) குறிக்கும். இது ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு மிகாமல் இருப்பது பொருளாதாரத்துக்கு அவசியம்.
தமிழ்நாட்டில் கடன் – வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் 32% ஆக இருந்த கடன் – வளர்ச்சி சதவீதம் இந்த நிதியாண்டில் 25.63% ஆக குறைந்துள்ளது. கடன் – வளர்ச்சி சதவீதம் 29.19% க்குள் இருக்க வேண்டும் என 16வது நிதி ஆணையம் கூறுகிறது.
நிதி பற்றாக்குறை சதவீதம் என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வருமானத்துக்கும் ஒட்டு மொத்த செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும். உதாரணமாக ஒரு குடும்பத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வருமானம், 35 ஆயிரம் செலவு என்றால் அந்த குடும்பத்துக்கான நிதி பற்றாக்குறை ரூ.5 ஆயிரம். தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த ஆண்டு 3.8 % ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது 3.25% ஆக குறைந்துள்ளது.
