போரை தொடரும் இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் பேரை அனுப்பும் ஹரியாணா பாஜக அரசு – எதற்காக தெரியுமா?

ஹரியாணா அரசு, இஸ்ரேலில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

ஹரியாணா மாநில அரசு நிறுவனமான ‘ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகம்’ வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவது இதுவே முதல் முறை.

துபாயில் பாதுகாப்புப் பணியாளர் பணியிடங்கள், இங்கிலாந்தில் செவிலியர்களுக்கான பணியிடங்கள், மற்றும் இஸ்ரேலில் உள்ள பணியிடங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இந்த நிறுவனம் தனது இணையதளத்தில் கோரியுள்ளது.
இவற்றுள் இந்த மூன்று நாடுகளில் இஸ்ரேலில் மட்டும் 10,000 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. மீதமுள்ள இரண்டு நாடுகளில் 170 பேர் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியதில் இருந்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் நடத்தும் காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலில் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் போர் எப்போது நிறுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதன் தொடக்கத்திலேயே, இஸ்ரேலில் பணிபுரியும் பாலத்தீனர்களின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதனால் இஸ்ரேல் தொழிலாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.

மதிப்பீடுகளின் படி, இஸ்ரேலுக்கு சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை. அதை ஈடுகட்ட இந்தியாவை நோக்கி இஸ்ரேல் திரும்பியிருக்கிறது.

இந்த வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்? தங்குவதற்கான ஏற்பாடுகள் என்னவாக இருக்கும்? மருத்துவக் காப்பீடு கிடைக்குமா? ஹரியாணாவுக்கு வெளியில் இருந்து ஒருவர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியுமா?
இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன, அவற்றுக்கான பதில்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.

இந்த வேலையில் உங்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்? இதைப் பற்றி பேசுவதற்கு முன், இஸ்ரேலில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசலாம்.