டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்

கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்ட காரணத்துக்காக, அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை, முதன் முறையாக பேஸ்புக் நீக்கியது; அவரது தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை முடக்கி டுவிட்டர், நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில், பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், பள்ளிகள் திறக்கலாம் என தெரிவித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா எளிதில் பரவாது எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொரோனாவை கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொரோனா…

Read More

ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் – மோடி வாழ்த்து

ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் – மோடி வாழ்த்து

இலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார். இலங்கை பார்லி.யில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார். பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. .ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன…

Read More

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து கேரள பிஷப்பை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு !!

கேரளாவில், கோட்டயம் அருகே குருவிளங்காடு தேவாலயத்தில் பிஷப்பாக இருந்தவர், பிராங்கோ மூலக்கல், 55. குருவிளங்காடு தேவாலயத்தில் பணியாற்றிய காலத்தில், கன்னியாஸ்திரி ஒருவரை, பிராங்கோ மூலக்கல் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப் பட்ட கன்னியாஸ்திரி, குருவிளங்காடு போலீசில் புகார் செய்தார். பிரச்னை பெரிதானதையடுத்து, கோட்டயம் போலீசார் 2018-ல் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், மூலக்கல்லுக்கு, கேரள உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமின் வழங்கியது. தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் மீது கன்னியாஸ்திரி பணம் பறிக்கும் நோக்குடன்…

Read More

ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து

அயோத்தியில் நாளை நடைபெற உள்ள ராமர் கோவில் பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் ராமர் கோவில்…

Read More

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

அடிக்கல் நாட்டு விழா: அமெரிக்க கனடா வாழ் இந்தியர்கள் பெரிதாக கொண்டாட திட்டம் !!

ராமர் கோவிலுக்கு நாளை(ஆக.,5) அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அமெரிக்க கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தவும், வீடுகளில் விளக்கேற்றவும் அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை (ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவையொட்டி அயோத்தி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவை, சிறப்பாக கொண்டாட அமெரிக்க-கனடா வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெறும் நேரத்தில், வீடுகளில் விளக்குகள் ஏற்றி வழிபட, அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், அமெரிக்க-கனடா கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்…

Read More

கிழக்கு ஆப்பிரிக்க மாலவி நாட்டில் 5 மாதங்களிள் 7000 மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்க மாலவி நாட்டில் 5 மாதங்களிள் 7000 மாணவிகள் கர்ப்பம்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பரிக்க நாடான மாலவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அந்நாட்டு மாணவிகள் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 7,000 பேர் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா பேசியதாவது,…

Read More

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்

அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பபடுவது காலாச்சார தேசியவாதம் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அயோத்தியில் கோவில் உருவாவது ஒரு மத விவகாரம் அல்ல. அதே நேரத்தி்ல் கலாச்சார விழிப்புணர்வுக்கானது.ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசிய வாத்திற்கானது. கோவில் கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார். மேலும் மதச்சார்பின்மைக்காக கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள் குறித்து அவர் கூறுகையில் மதசார்பின்மை என்ற பெயரில் தேசியவாதத்தையும், கலாச்சார தேசிய வாதத்தையும் அடக்க முடியாது . ராம் கோவிலின் கட்டுமானம் இந்தியாவில் கலாச்சார தேசியவாதத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் நாட்டின் மேற்கத்திய மனநிலையை மாற்றும் எனவும் கூறினார்.

Read More

குஷ்பு ப.ஜ.பா வுக்கு தாவுகிறாரா? தலைமைக்கு தலையாட்டமாட்டேன் : புதிய கல்வி கொள்கை

குஷ்பு ப.ஜ.பா வுக்கு தாவுகிறாரா?  தலைமைக்கு தலையாட்டமாட்டேன் : புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ‘தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை’ என தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உண்மையை தான் பேசுகிறேன். நான் கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல. கட்சித் தொண்டர் என்பதை விட…

Read More

அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

அமெரிக்க தேர்தலில் இ- மெயில் ஒட்டளிப்பு முறையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை தள்ளி வைக்கலாம் என அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு ( நவம்பர்) இறுதியில் நடக்கிறது. அமெரிக்காவை ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு, பொருளாதார பிரச்னை போன்றவற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் ஓரிரு மாகாணங்களில் பிரைமரி தேர்தலில் இ- மெயில் மூலம் ஓட்டளிக்க அனுமதிப்பட்டது. இதில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார். இது போன்று ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்காமல் ‘இ – மெயில்’ மூலம் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்ட முறை…

Read More

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா

பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கும் நோய் அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ நான் ஈ’ படம் மூலம், திரைப்பட உலகை அதிர வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. ரூ. 200 கோடி செலவில், ‘பாகுபலி’ என்ற, பிரம்மாண்டமான படத்தை உருவாக்கினார். உலகம் முழுவதும், 4,000 தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்பட்டு வசூலை வாரி குவித்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண் , ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் ஆர் ஆர் ஆர் படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று தென்பட்டதையடுத்து வீட்டிலேயே…

Read More
1 125 126 127 128 129 425