இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார். உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை…

Read More

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள், கட்சியிலிருந்து விலகியதால் ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்களை நிறைவு செய்யவுள்ள கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, ஆட்சியைக் காப்பாற்ற கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சியிலிருந்து சிந்தியா விலகிய பிறகு அவரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா கடிதங்களை ஆளுநர், சட்டசபை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். இதனால், கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் சட்டசபையில் காங்., பலம் 92ஆக குறைந்துவிடும். பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் தேவையுள்ள நிலையில்,…

Read More

முன்னாள் காதலியை ” விபசாரி ” என்று பேசிய சீமானின் தமிழ் பண்பாடு காற்றில் பறக்கிறது !!

முன்னாள் காதலியை ” விபசாரி ” என்று பேசிய சீமானின் தமிழ் பண்பாடு காற்றில் பறக்கிறது !!

‘மேடைகள் தோறும், என்னை விபச்சாரி என, சித்தரித்து பேசிவரும், சீமான் மற்றும் அவரது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, நடிகை விஜயலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார். ‘தம்பி’ உள்ளிட்ட படங்களை, இயக்கியவர், சீமான். இவர், நாம் தமிழர் என்ற அமைப்பை துவங்கி, ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவரும், ‘பூந்தோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள, விஜயலட்சுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான், வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால், சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஜயலட்சுமி, காதலர் தினத்தன்று, இருவரும், ‘கேக்’ வெட்டிய படங்களையும் வெளியிட்டார். சமீபத்தில், சீமான், ‘ஏய் பொண்டாட்டி… நான் கெட்டவன் இல்லடி… கேடு கெட்டவன்டி’ என, பேசுவதுபோல, ‘வீடியோ’…

Read More

சிந்தியாவால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பிஜேபியின் தாமரை மலர்கிறது

சிந்தியாவால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பிஜேபியின் தாமரை மலர்கிறது

ம.பி., காங்கிரஸ் அரசு மீது அதிருப்தியில் இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இன்று திடீர் திருப்பமாக சந்தித்து பேசி உள்ளார். இது காங்., மேலிடத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர். இன்றைய நிலவரப்படி மொத்தம் 24 எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கமல்நாத் மற்றும் டில்லி மூத்த நிர்வாகிகள் நடத்திய…

Read More

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

பல்வேறு முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ” யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இதனை எடுக்க முடியாமல் இந்த கோயில் நிர்வாகம் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார். வாராக்கடன் நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’ சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ‘அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம்’ என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது…

Read More

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடுவதாகவும் பாஜ தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள ரபின்திர பாரதி பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகிறார்கள். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கம்?பெண்கள் இப்படி இருந்தால், அவர்களுடன் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும். இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு…

Read More

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் இருக்கும், அன்பழகனின் உடல் நலம் குறித்து, டாக்டர்களிடம், கேட்டறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை உள்ளது’ எனத் தெரிவித்தார். தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அன்பழகனுக்கு, சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து, அவரது உறவினர்களிடமும், டாக்டர்களிடம் விசாரித்தார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:…

Read More

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா தாக்கம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்திற்கு பின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் நேற்று (மார்ச் 5) கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் இதுவரை, 20 மாகாணங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவற்றை ஒரு…

Read More

யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதீயூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துக்கொண்டுள்ளன. அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 20…

Read More

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…

Read More
1 145 146 147 148 149 425