சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது. ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் கைதாவார். இந்நிலையில் டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். சிதம்பரம் வீட்டிற்கு இன்று ( ஆக.20) இரவு 11.30 மணிக்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம்…

Read More

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். .தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்.. இந்த அற்புதமான வைபவம் வெள்ளிக்கிழமை 16-08-2019 அன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. அதில் நாமும் கலந்து கொண்டு தரிசித்து வரம் பெற்று பக்தியை உணர்ந்தோம். தமிழ்நாடு காவல்துறையினர் துணை செய்தனர். இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித…

Read More

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2006 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார்….

Read More

இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் புதிய ராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த மகேஷ் சேனாநாயக் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார். 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின்போது ராணுவத்தின் 58-வது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இலங்கை போரின்போது மனித உரிமை மீறப்பட்டதாக 2013-ம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சவேந்திர சில்வாவின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More

முத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது

முத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது

முத்தலாக் கூறிய கணவன் மீது புகார் அளித்த மனைவியை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உபி., யில் ஸ்ரவாஸ்தி மாவட்டம் காத்ரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்சான்கான் மகள் சையீதா 22. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நபீஷ் 26. என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து நபீஷ் மும்பைக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு இருந்தபடியே போனில் சையீதாவிடம் முத்தலாக் கூறி விவாகாரத்து செய்துள்ளார். இதனையடுத்து சையீதா போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். போலீசார் வழக்கு பதியாமல் இரு குடும்பத்தினரிடமும் பேச்சு நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…

Read More

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, லடாக் தொகுதி எம்.பி.,யான பா.ஜ.,வை சேர்ந்த ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக லடாக் பகுதி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், மாநிலத்தை, குடும்ப தொழிலுக்காக பயன்படுத்தினர். அந்தஸ்து நீக்கப்பட்டால், அவர்களின் தொழில்…

Read More

கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

கயிறும், திலகமும் ஜாதி அடையாளமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ்

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் கையில் வண்ண கயிறு, நெற்றியில் திலகம் அணிந்து வருவதை ஜாதி அடையாளமாக சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, உத்தரவை கல்வித்துறை வாபஸ் பெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம், சமீபத்தில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், ‘பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தமிழக பள்ளிகளை பார்வையிட்டபோது, ஒரு சில பள்ளிகளில் விளையாட்டு அணி தேர்வு செய்யும் போதும், மதிய உணவு இடைவேளை மற்றும் வகுப்பு நேரங்களிலும், குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள், அடையாளம் கண்டு ஒன்று கூடிக்கொள்ளும் வகையில், தங்களது கையில் சிவப்பு, மஞ்சள்,…

Read More

ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா…

Read More

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

மலேஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், இந்தியா சென்று, வழக்குகளை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக். இஸ்லாமிய மத பிரசாரகர். பல்வேறு நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக, 193 கோடி ரூபாய் நிதி பெற்று, இந்தியாவில், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து உள்ளார். இது தொடர்பாக, அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்து உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல், ஜாகிர் நாயக் மலேஷியாவில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்த மலேஷியா மறுத்துவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஜாகிர் நாயக் அளித்த பேட்டி…

Read More

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ராஜதந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர். முதலில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு பின்னர் பார்லிக்கு கொண்டு வந்தனர். மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, ‘கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அர்ஜுனன் அதை செயல்படுத்துபவர் . காஷ்மீர் விவகாரத்தில் இருவரும் ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க கூடாது; எதை அரசியல் ஆக்க வேண்டும் என்பதை சில…

Read More
1 176 177 178 179 180 425