பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை

பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை

2017ம் ஆண்டு நிகழ்ந்த பெஹ்லு கான் கும்பல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும் ராஜஸ்தான் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. விப்பின் யாதவ், ரவீந்திர குமார், காலு ராம், தயானந்த், யோகேஷ் குமார், பீம்ராட்டி ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு ஹரியானாவின் நூர்க்-ஐ சேர்ந்த பெஹ்லு கானை, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் கும்பல் ஒன்று தாக்கியது. பசுக்களை ஏற்றிக்கொண்டு ஜெய்பூரில் இருந்து அவரது கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டபோதே, இந்த தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர், 55 வயதான பெஹ்லு கான் மருத்துவமனையில் உயிரிழந்தார். “பசு பாதுகாப்பாளர்கள்“ என்று கூறப்படுவோரால்…

Read More

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி…

Read More

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது. பி 5 உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கூறும்போது… பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பூக்களுடன் நிற்கவில்லை. பி 5 உறுப்பினர்களில் எவரும் தடையாக இருக்க…

Read More

ஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா?

ஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா?

ஆக.,15ல் காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன. நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (ஆக.,15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன், காஷ்மீர், லடாக் என மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது. இதனால், காஷ்மீரில் வரும் சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள, லால் சவுக்கில் நடைபெறும் சுதந்திர தின விழா…

Read More

“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

“வட மாகாண தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவேன்” – கோட்டாபய ராஜபக்ஷ

வட மாகாண தமிழ் மக்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். தனக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களை, எல்லைக்குள் இருந்து நிறைவேற்றாது, எல்லைக்கு அப்பாற் சென்று நிறைவேற்றுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைவாகவே எல்லைக்கு அப்பாற் சென்று தனது பொறுப்பை…

Read More

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது – பிரகாஷ் ஜவடேகர்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370–ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்த பிரிவு பயன்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளதால், அந்த மாநில மக்கள் இனிமேல் பிற மாநிலத்தவர்கள் பெற்று வரும் உரிமைகளை பெறுவார்கள். அந்த மாநில வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும்’ என்று தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக 370–வது பிரிவின் விலங்குகளில் இருந்து காஷ்மீர் மக்களுக்கு விடுதலை அளிக்க காங்கிரஸ்…

Read More

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,வுக்கு 33 % இட ஒதுக்கீடு

‘தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும்’ என சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார். கவர்னர் மாளிகையில் அமித்ஷாவை முதல்வர் சந்தித்தது போது இந்த நெருக்கடி தரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய ‘கற்றல், கற்பித்தல், தலைமையேற்றல்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பா.ஜ., தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்து கவர்னர் மாளிகையில் தங்கினார். அப்போது அமித்ஷாவை தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென சந்தித்து…

Read More

ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” – ரணில் விக்ரமசிங்க

ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” – ரணில் விக்ரமசிங்க

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். சஹ்ரானை நேரில் சந்திக்காத பலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் திசை திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், சஹ்ரான் ஹாஷிமின் போதனைகள் அனைத்தும், தமிழ் மொழியில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், போதனைகள் தமிழ் மொழியில் காணப்படுகின்றமையினால் அது தமிழ்நாட்டிற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ”சஹ்ரானை சந்திக்காதவர்கள் சிலர், அவரது போதனைகளை கேட்டு அவர் பக்கம் சென்றுள்ளனர். சஹ்ரான் தமிழ் மொழியில் போதனை செய்துள்ளமையினால், அது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, தென்னிந்தியாவிற்கும் அது பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது….

Read More

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

வைகோ – காங்கிரஸ் கடும் மோதல்: காஷ்மீர் தொடர்பான நாடாளுமன்ற உரை

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கவும் அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளை ரத்துசெய்யவுமான மசோதாக்கள் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்த விவகாரம் குறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். அந்தப் பேச்சில் அவர் காங்கிரஸ் கட்சியையும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் கடுமையாகத் தாக்கினார். “காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நேரு வாக்குறுதியளித்தார். ஆனால், நடத்தப்படவில்லை. இதையடுத்து 1958ல் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தினார். அவர் கொடைக்கானலில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதையே பொது வாக்கெடுப்பு என்று சொன்னார்கள். ஒரு மோசடியை காங்கிரஸ் கட்சி நிகழ்த்தியது. எனக்கு நேருவின் மீது மரியாதை இருக்கிறது….

Read More

கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பெய்துவரும் பருவமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மிக அதிகன மழைக்கும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய…

Read More
1 177 178 179 180 181 425