நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் பலி
நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது. ராணுவ வீர்ர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் காணாமல் போனதாகவும் பல மக்கள் காயமடைந்தாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறைய வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடந்துள்ளன. 1500க்கும் மேற்பட்ட பேர் மீட்கப்பட்டுள்ளனர். 16,000 பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் பெய்த மழை மாதாந்திர சராசரி மழையை விட அதிகமானது. இதனால் மலைப் பிரதேசங்கள் பலவற்றில் நிலச்சரிவு…
Read More









