ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது-சுப்ரீம் கோர்ட்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம்…

Read More

உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாக்., மாறும்

உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக பாக்., மாறும்

உலகின் 5வது அணுசக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும் என அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர். பாகிஸ்தான் அணுசக்தி குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவை சேர்ந்த, கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ் நாரிஸ் ஜிலியா டையமன்ட் ஆகியோர் தங்களது அறிக்கையில், பாகிஸ்தான் தற்போது 140 முதல் 150 அணு ஆயுதங்கள் வைத்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால், அந்த நாடு 2025 ல் 220 முதல் 250 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இது நடந்தால், உலகின் 5வது மிகப்பெரிய அணுசக்தி நாடாக மாறும். பல விநியோக அமைப்புகள், நான்கு புளூட்டோனியம் உற்பத்தி உலைகள்,, யூரேனியம் செறிவூட்டல் வசதிகள் ஆகியவை விரிவடைந்து உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில்…

Read More

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார். சீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: “சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு ‘சரி’…

Read More

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

விமானத்தில் பா.ஜ.,விற்கு எதிரான கோஷம் எழுப்பிய சோபியா என்ற மாணவியின் போராட்ட பின்னணி குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பா.ஜ., தலைவர் தமிழிசை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது அவரை விமர்சித்த, தூத்துக்குடியை சேர்ந்த பெண் சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கனடாவில் படித்து வரும் சோபியா தனது பெற்றோர்களுடன் விமானத்தில் பயணித்த போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் சோபியா 28. கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக பயின்றுவந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அவரை தந்தையும், தாய் மனோகரியும் சென்னை சென்று விமானத்தில் அழைத்துவந்தனர். பெற்றோர்கள்…

Read More

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?

பா.ஜ.,வில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால்?

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது. டில்லியில் பிரதமர் மோடியை, பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று (செப்.3) சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மோகன்லால் பா.ஜ.,வில் இணைய உள்ளதாகவும், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவில், மோகன்லாலை களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் தொகுதியில், மோகன்லால் போட்டியிடுவார் என்றும், இதனால் கேரளாவில் பா.ஜ., பலம் பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Tune-Up Your Heart in 30 Days

Tune-Up Your Heart in 30 Days

Have I been missing a vital remedy to maintain a healthy heart? I wondered if that was the case when I read an article in LifeExtension titled, “The 30-Day Heart Tune-Up.” The author, Dr. Steven Masley, is a Fellow of both The American Heart Association and The American Academy of Nutrition. He has   devoted his career to heart disease and aging. So how does his treatment differ from that of other cardiologists?           Masley reports…

Read More

மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை!

மாண்புமிகு வடக்கு முதலமைச்சரை எதிர்ப்பதிலேயே தமிழர் தலைமை தீவிரம் காட்டுகின்றதே தவிர வேறொன்றும் அங்கு இடம்பெறவில்லை!

தமிழ் அரசியல்வாதிகளை நம்பி இனிப் பிரயோசனம் இல்லை என்பது தெரிந்த விடய மாயிற்று. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியோ அன்றி தமிழத் தேசிய கூட்டமைப்போ, இரண்டு அரசியல் பீடங்களின் முக்கிய பணியாக உள்ளது, எப்படி மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன் அவர்களை மீண்டும் முதலமைச்சராவதைத் தடுப்பது என்பது தான். கடந்த வாரம் கனடாவிற்கு வருகை தந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா (மேயர்) திரு ஆனோல்ட் உடனான சில மணி நேர சந்திப்பின் போது கனடா உதயன் ஆசிரிய பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் இவைதான். “அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பான மேயராக இருந்தபோது அவர் தென்னிலங்கை…

Read More

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள்

”மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்பி வருவான்” என்று கூறியபோது அவரது கண்கள் குளமாகியது. மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பிபி.சி தமிழிடம் தெரிவித்த ஆதங்கம்தான் இது. “உறவுகளின் பிரிவு என்பது கொடுமையானது. அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமையானது” என்று தனது கணவரைத் தொலைத்துவிட்டு பல வருடங்களாக தேடியலையும் இன்னொரு பெண் கூறினார். 30 வருடங்களுக்கு மேலாக தமது…

Read More

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த, எழுத்தாளர் வரவர ராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ‘இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்புஉள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு…

Read More

கூட்டமைப்பு தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணிக்கின்றது : கொழும்பு பேட்டியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்

கூட்டமைப்பு தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணிக்கின்றது : கொழும்பு பேட்டியில் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்

அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்பட்டு வருகின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வடக்குகிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணியில் புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அமைச்சர்களையும் முப்படைத்தளபதிகளையும் ஜனாதிபதி உள்வாங்கியதுடன், இன்று கூட்டமைப்பின் உறுப்பினர்களை செயலணியின் கூட்டத்துக்கு அழைத்திருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் எங்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்கத்தை காப்பாற்றும் பயணத்தில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் வெளிநாட்டு செய்தி நிறுவனம்…

Read More
1 238 239 240 241 242 425