இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முதல்வர் தொடங்கி வைத்த மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். அதனால் அணையின் கொள்ளளவு 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது. அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் அறிவித்திருந்ததால், வண்டல்…

Read More

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் புடைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்ய தமிழ் நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பரவியிருக்கும் சொத்துகளை எந்த வகையில் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் திணறியது. பின்னர் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டபோது, தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி அந்த சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெய லலிதா,…

Read More

‘வட சென்னை’ அப்டேட்: விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்

‘வட சென்னை’ அப்டேட்: விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர், இயக்குநர் அமீர் நடிக்கவுள்ளார். ‘விசாரணை’ படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வட சென்னை’. 3 பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படம், வடசென்னையில் இருக்கும் ஒரு தாதாவின் 30 வருட வாழ்க்கையைச் சொல்லும் விதமாக உருவாகிறது. இதில் தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின. அவரும் அதை உறுதிப்படுத்தினார். ஆனால் படப்பிடிப்பு தேதிகள் தனக்கு ஒத்து வராததால் விஜய் சேதுபதி விலகினார். தற்போது அந்தக் கதாபாத்திரத்தில், நடிகரும் இயக்குநருமான அமீர் நடிக்கவிருப்பதாக…

Read More

‘ஸ்கெட்ச்’ அப்டேட்: 85% படப்பிடிப்பு நிறைவு; செப். வெளியீடு

‘ஸ்கெட்ச்’ அப்டேட்: 85% படப்பிடிப்பு நிறைவு; செப். வெளியீடு

‘ஸ்கெட்ச்’ படத்தின் 85% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், செப்டம்பர் வெளியீடாக இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கி வருகிறார் விஜய் சந்தர். தமன்னா, ஸ்ரீமன், சூரி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். தமன் இசையமைத்து வரும் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும், விரைவில் சென்னையில் அரங்கம் அமைத்து பாடல் ஒன்றை படப்பிடிப்பு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். மேலும், இறுதிக்கட்டப் பணிகளை முடித்து செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டது…

Read More

சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வரு கிறார் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இறைச்சிக்காக மாடுகள் விற் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழ கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பீமராவ், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Read More

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்க பயிர் கடன் தமிழ்நாட்டில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும். நியாயமான நடவடிக்கை தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில், அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இயற்கை அதன் கொடுங்கரங்களால் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது, அது சிறு, குறு விவசாயிகள்,…

Read More

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது கோர்ட்டு…

Read More

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை அடுத்து ஜூன் 2-ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு சமம். இந்த அறிவிப்பை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மத்தியில் ஆளும் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

Read More

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல்முறையாக தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத் தார். ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட நிலை யில், இதுவரை அணையில் தூர் வாரப்படவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணையில் மூலக்காடு நீர்பரப்புப் பகுதியில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அணையின் வலது கரைப் பகுதியில் உள்ள மூலக்காடு, கொளத்தூர், பண்ணவாடி, இடது கரைப் பகுதியில் உள்ள கூணான் டியூர் மற்றும்…

Read More

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். குறிப்பாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி இருப்பதாக வருகிற செய்தி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. மழை வரும் போது அவர்கள் தூர்வாரும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். 2 மாதத்திற்கு முன்னதாக இந்த பணியை தொடங்கி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் மற்றும் பொம்மைகள் செய்யக்கூடியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்யும் நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது….

Read More
1 341 342 343 344 345 425