சரக்கு சேவை வரியை குறைத்து சினிமாவை காப்பாற்றுங்கள்; கமல்ஹாசன் மீண்டும் வற்புறுத்தல்

சரக்கு சேவை வரியை குறைத்து சினிமாவை காப்பாற்றுங்கள்; கமல்ஹாசன் மீண்டும் வற்புறுத்தல்

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமுல்படுத்த மத்திய அரசு புதிதாக சரக்கு சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி) முறையை கொண்டு வந்து இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) 1–ந்தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களுக்கும் 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ் திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய வர்த்தசபையின் அவசர கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டு தமிழ் படங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. வரியை குறைக்க வேண்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நிருபர்களிடம் கூறும்போது,…

Read More

‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் நயன்தாரா?

‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் சுருதிஹாசனுக்கு பதில் நயன்தாரா?

‘பாகுபலி–2’ படத்துக்கு பிறகு சரித்திர படங்கள் பக்கம் திரையுலகம் திரும்பி இருக்கிறது. சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு கால கட்டத்தை பின்னணியாக வைத்து ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் புதிய சரித்திர படத்தை டைரக்டு செய்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் ரூ.250 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் கதாநாயகர்களாக நடிக்க ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கதாநாயகியாக இளவரசி வேடத்தில் நடிக்க சுருதிஹாசனை தேர்வு செய்தனர். இதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று பல மாதங்கள் வாள் சண்டை பயிற்சி எடுத்து திரும்பினார். பின்னர் ஜெயம்ரவி போர்க்கப்பலில் பயணிப்பதுபோன்றும் சுருதிஹாசன் வாளுடன் குதிரையில் பாய்வதுபோன்றும் முதல் தோற்ற படங்களை வெளியிட்டனர். சுருதிஹாசன் விலகல் பாகுபலி போன்று…

Read More

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு சமீபத்தில் நடந்தது. நேர்முகத்தேர்வில் ஹேமலதா முதலிடம் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற…

Read More

டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி

டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி

‘கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன்’ என்று அவர் அறிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் 27 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். 60 நாட்கள் பின்னர், பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘இனியும் டி.டி.வி.தினகரனுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம்’ என்று கூறினார். அந்த நேரத்தில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. 60 நாட்கள் காத்திருந்து கட்சி நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார். 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்த 11 எம்.எல்.ஏ.க்களும் அவருடன் சென்றனர். அதாவது, தங்க தமிழ்ச்செல்வன்…

Read More

‘வேலையில்லா பட்டதாரி 2’ புது போஸ்டர் வெளியீடு: டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது

‘வேலையில்லா பட்டதாரி 2’ புது போஸ்டர் வெளியீடு: டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது

தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸர் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இன்ஜினீயரிங் பட்டதாரியின் வேலை தேடும் அவஸ்தையையும், வேலையை தக்க வைத்துக்கொள்ள போராடும் முயற்சியையும் பதிவு செய்த படம் இது. தனுஷுக்கு வணிக ரீதியிலான வெற்றியைக் கொடுத்த விதத்திலும் ‘வேலையில்லா பட்டதாரி’க்கு முக்கியமான இடம் உண்டு. இது தனுஷின் 25-வது படமும் கூட. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘வேலையிட்டா பட்டதாரி 2’ படம் சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர்…

Read More

அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க.வில் பிளவு தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் பொதுச் செயலாளராக இருந்த அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ஒரு அணிக்கு கட்சியின் புதிய பொதுச் செயலாளரான சசிகலாவும், மற்றொரு அணிக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தலைமை வகித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்–அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொள்ள சசிகலா முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சசிகலா சரண் அடைந்தார். பின்னர், அங்குள்ள சிறையிலேயே அவர் அடைக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம்…

Read More

தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்

தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்

தமிழ்நாட்டின் வேலூரில் ;அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் என பக்தி பூர்வமாக அழைக்கப்படும் “தங்கக் கோவில்” தற்போது தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடும் ஒரு புண்ணிய தலமாக உருவெடுத்துள்ளது. தங்கக் கோவிலை தனது கனவாக எண்ணி உருவாக்கிய “அம்மா” அவர்களை நேரில் கண்டு அவரது ஆசிபெறும் சந்தர்ப்பமும் கனடா உதயன் குழுவினருக்கு கடந்த செவ்வாயன்று கிட்டியது. கனடா உதயன் செய்திப் பிரிவு

Read More

யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..

யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..

யாழ்ப்பணத்திற்கு சென்றுவரும் புலம் பெயர் அன்பர்கள் “யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்குது” என்று வாய் இனிக்க பகிர்ந்து கொள்வார்கள். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 வீதி வழியாகவோ அன்றி பூநகரி பாதை வழியாகவோ சென்றால் பிரதான வீதிகள அழகாகவும் விசாலமாகவும் அமைக்கபபட்டிருககின்றன. இதனால் நன்மையடைபவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஏழை மக்கள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து அங்கு பயணிப்போர், அதனிலும் மேலாக தென்னிலங்கை சுற்றுலாப்; பயணிகள், தென்னிலங்கை முதலீட்டாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வீதி வழியாக தங்கள் முகாம்களுக்கு தேவை நிமித்தம் பயணிக்கும் படையினர். தற்போது தென்னிலங்கை முதலீட்டாளர்கள் பலர் யாழ்பபாணத்தில் பல வர்த்தக முயற்சிகளில் முதலிட்டுள்ளார்கள். பல அரசாங்க ஒப்பந்தங்கள் கூட சிங்கள கொந்தராத்துக் காரர்களுக்கு மட்டுமே…

Read More

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியீடு

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியீடு

‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர் நடித்துள்ள படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. படம் குறித்து இயக்குநர் ஞானவேல் கூறுகையில், ”பெரும்பான்மையான குடும்பங்களில் மூத்த குழந்தையையோ அல்லது இளைய குழந்தையையோ கொஞ்சுவார்கள். அவர்கள் அப்பா செல்லமாக, அம்மா செல்லமாகவோ இருப்பார்கள். ஆனால், இடையில் பிறந்த குழந்தை மீது பெரிதாக கவனம் இருக்காது. அப்படி இடையில் பிறந்த ஒருத்தன் இந்த உலகத்தை மாற்றி அமைக்கப் புறப்படுகிறான். நடு பெஞ்ச் மாணவர்களின் முக்கியத்துவத்தைக் கூறுவதே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை” என்றார். ‘ரத்த சரித்திரம்’, ‘பயணம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய…

Read More

விருதுகள் வழங்கப்படுவது எப்படி?- அரவிந்த்சாமி விளாசல்

விருதுகள் வழங்கப்படுவது எப்படி?- அரவிந்த்சாமி விளாசல்

யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது என்று அரவிந்த் சாமி காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழக நிலவரம், அரசியல் சூழல், நடப்புப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தன் கருத்தை தெரிவித்து வருகிறார் நடிகர் அரவிந்த் சாமி. தற்போது விருதுகள் குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், ”சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் விருது விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது. இதனால் விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், நான் வாக்குகளுக்காக என் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். எந்த விருது வழங்கும் விழாவுக்காக இப்படி ட்வீட் செய்துள்ளார் என்பது குறித்து அரவிந்த்சாமி…

Read More
1 339 340 341 342 343 425