ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை அமைச்ச‌ர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியார்களிடம் கூறியதாவது: நடிகர் ர‌ஜினி அர‌சிய‌லுக்கு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து தற்போது வெளியிட முடியாது. அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடப்பதாக முதல்-அமைச்சர் கூறியது உண்மை தான். அனைத்து அமைச்ச‌ர்க‌ளையும் கூட்டி முதல்-அமைச்சர் த‌லைமையில் மாட்டிறைச்சி விவ‌கார‌த்தில் முடிவெடுக்க‌ப்ப‌டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்

மும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்

பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு காலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா,…

Read More

அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்?

அனுஷ்காவுக்கு எப்போது திருமணம்?

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, அமைதியான சுபாவம், ஆக்ரோஷமான நடிப்பு.. போன்றவைகளின் கலவையாக காட்சியளிப்பவர், நடிகை அனுஷ்கா ஷெட்டி. குடும்பம், திருமணம், எதிர்காலம் பற்றி அவர் சொல்கிறார்: *கர்நாடகாவில் நான் பிறந்தேன். என் பெற்றோர் வித்தல் ஷெட்டி- பிரபுல்லா. குணராஜ் ஷெட்டி, சாய் ரமேஷ் ஷெட்டி என்ற இரு சகோதரர்கள் எனக்கு உண்டு. எனது யோகா குரு பரத் தாகூருக்கு என் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். பட்டப்படிப்பு முடித்த பின்பு சிறிது காலம் யோகா ஆசிரியையாக வேலை பார்த்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு திரை உலகத்தை பற்றி எதுவுமே தெரியாது. *2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். நாகார்ஜூனா கதாநாயகன். பின்பு…

Read More

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தமிழ் மொழியில் இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ஸ்டிக்கரை, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அப்போது இல.கணேசன் எம்.பி. உடன் இருந்தார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவினை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்….

Read More

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார். அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார். பிரமாண்ட விழா மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான அளவில் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்தார். இந்த விழா சட்டசபையில் நடைபெற உள்ளது. விழா நடக்கும் நாள் பற்றி தற்போது அரசு ஆலோசித்து வருகிறது….

Read More

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

“பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்” என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி: மோடி நாட்டின் பிரதமரான பிறகு பாமர மக்களின் வங்கிக் கணக்கு ரூ. 4 கோடியிலிருந்து, ரூ. 28 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டில் 23 கோடி பேருக்கும், குமரி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேருக்கும் ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது. பாமர மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு திட்டத்தில் குமரியில் 1.26 லட்சம் பேரும், தமிழகத்தில் 65 லட்சம் பேரும் இணைந்திருக்கின்றனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் குமரியில் 1,600 பேரும், தமிழகத்தில் 2.14 லட்சம் பேரும்…

Read More

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் சேர்ந்து விடுவதே நல்லது என நாஞ்சில் சம்பத் பேசினார். டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மதுரை சுப்பிர மணியபுரத்தில் நேற்று இரவு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி செல்ல பெரும் பங்கு வகித்தவர் சசி கலா. ஆனால், ஆட்சியிலோ, கட்சியிலோ பதவிகளுக்கு வர அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ. பன்னீர்செல்வம் அரசியலுக்கு வர வாசல் அமைத்துக் கொடுத்தவர் சசிகலா. ஆனால், இன்று ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும், அதிமுக வையும்…

Read More

இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

மதவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல்களுக்கு தூபமிடுவதை ஊக்குவிக்கும் செற்பாடுகள் போன்றவை, இலங்கைக்கு அருகில் உள்ள பாரதத் திருநாட்டில் மேற்கொள்ளப்படுவதால் அந்த நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ளுகின்றது. மதவாதப் பிடிக்குள் தத்தளிக்கும் பாரத தேசத்தில் இந்து முஸ்லிம் மோதல்களை தூண்டி நிற்பதில் பாகிஸ்த்தான் போன்ற நாடுகளும் அடங்குகின்றன. இதனால் அந்த நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மிக அதிகானவை ஆகும். இதேபோன்று இனவாத செயற்பாடுகளும் விமர்சனங்களும் மிகவும் மோசமான விதத்தில் பரவி நிற்கும் இலங்கையிலும் பாதிப்புக்கள் மக்களை வருத்தியும் வதைத்தும் நிற்கின்றன. அங்கு இனவாதத்தை தூண்டும் முதற் பிரிவினராக பௌத்த பிக்குகள் அல்லது அவர்களின் தலைமைப் பீடங்கள் காரணமாக அமைகின்றன. அவர்களைத் தொடர்ந்து…

Read More

அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகி யோருக்கு தொடர்பு கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப் பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா அழைப்பிதழை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் வழங்கும் காட்சிகளை செய்தித்தாள்களில் காணமுடிந்தது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என புரியவில்லை. அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோ ருக்கு சம்பந்தம் கிடையாது. முதல்வர் பழனிசாமி, வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடி உட்பட ரூ.71,000 கோடியை கோரியுள்ளார். இது நடைமுறை சாத்தியமற்றது என்றார்.

Read More

இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள்: மதிப்பு போய்விடும் என கருத்து

முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தால் எங்கள் மதிப்பே போய்விடும். இரு அணிகள் சேர்ந் தால் எங்களுக்கு வளர்ச்சி இருக் காது; வீழ்ச்சிதான் இருக்கும் என ஓ.பி.எஸ். அணி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், எம்எல்ஏக் கள் ஆறுக்குட்டி (கவுண்டம்பாளை யம்), ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப் பாளையம்), பி.ஆர்.ஜி.அருண் குமார் (கோவை வடக்கு), கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ஆளுக்கொரு திசையில் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேசும் போது, ‘‘ஓ.பன்னீர்செல்வம் தலை மையில் இருப்பதுதான் உண்மை யான அதிமுக. எதிரணியில் பணம், பதவிக்காகவே உள்ளார்கள்….

Read More
1 342 343 344 345 346 425