ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் உருவபொம்மை எரிப்பு
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும் அவர் பேசியது அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. ‘நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடி அறைகூவலும் விடுத்து இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்…
Read More








