அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6½ லட்சம் செலவில் பகுதிநேர ரே‌ஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சூர்யநகரம் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். இதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுபற்றி நடவடிக்கை எடுக் கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கஜலட்சுமி புரம் சூர்யநகரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ….

Read More

“சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்”: கங்கை அமரன் சிறப்புப் பேட்டி

“சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்”: கங்கை அமரன் சிறப்புப் பேட்டி

அதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் கங்கை அமரன் அளித்திருக்கும் சிறப்புப் பேட்டி. தமிழக பாஜகவில் பல முகங்கள் இருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களை வேட்பாளராக முன்னிறுத்தக் காரணம் என்ன? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாரை களமிறக்குவது என்ற ஆலோசனை நடைபெற்றபோது அனைவரும் ஒருமனதாக எனது பெயரை முன்மொழிந்தனர். கட்சியில் இணைத்த நாள்முதலே ஒரு தொண்டனாக கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான அங்கீகாரமே அது. ஏற்கெனவே கலைத்துறையில் பிரபலமானவர், மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பதைத்…

Read More

சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி

சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி

சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான். ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகும். ஆனால் நட்பு ரீதியாகப் பார்த்தால், அது சரியில்லை. நோட்டீஸுக்கு பதிலாக ஒரு போன் அழைப்பு எல்லா விஷயங்களையும் சுமூகமாகத்…

Read More

இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ…

Read More

இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம்: எஸ்பிபி

இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம்: எஸ்பிபி

இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம் என எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, “எனது நண்பர்கள், இசைப் பிரியர்கள் குறிப்பாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், இளையராஜா – எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல…

Read More

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது: தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் மேலும் விவரங்கள் கேட்டு நேரில் அழைத்துள்ளது. நாங்கள் டெல்லி சென்று கழக சட்டவிதிமுறைகள் குறித்து எடுத் துரைப்போம். எம்ஜிஆருக்கு பின்னால் அதிமுகவை மாபெரும் இயக்கமாக ஜெயலலிதா நடத்தி வந்தார். சிறந்த நிர்வாகத்தை அளித்தார். ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட தீபாவுடன் இணைந்து செயல்பட தயார். சட்டியில் இருந்தால்தான்…

Read More

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அணி மாறப் போவதாக மிரட்டல்: அதிகாரிகள் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு

சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அணி மாறப் போவதாக மிரட்டல்: அதிகாரிகள் மதிப்பதில்லை என குற்றச்சாட்டு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் கடந்த வெள்ளிக்கிழமை தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலன், சக்திவேல் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ், சம்பந்தப்பட்ட கல்குவாரியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதிமுகவில் சலசலப்பு சசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி…

Read More

ஓரிரு நாளில் புதிய கட்சி-தீபாவை முதல்வராக்குவதே நோக்கம்: கணவர் மாதவன் திடீர் பல்டி

ஓரிரு நாளில் புதிய கட்சி-தீபாவை முதல்வராக்குவதே நோக்கம்: கணவர் மாதவன் திடீர் பல்டி

புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த தீபாவின் கணவர் மாதவன் தீபாவை முதலமைச்சராக்குவதே அந்த கட்சியின் நோக்கம் என நேற்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 17-ம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் சில தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும், தீபா தனித்து செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும், தொண்டர்கள் விருப்பப்படி தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவர், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்றார். இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை சிஐடி காலனியில் தனது ஆதரவாளர்களுடன் மாதவன் தனியாக ஆலோசனை நடத்தினார்….

Read More

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரமாணப் பத்திரங்களாக்கி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம்….

Read More

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது சிம்பு குறிப்பிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ராஜேந்திரன், வி.டி.வி கணேஷ், மஹத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் பயணிக்கவுள்ளார்கள். ‘மதுரை மைக்கேல்’ கதாபாத்திரத்தின் டீஸரைத் தொடர்ந்து, மார்ச் 18ம் தேதி ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த டீஸரைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக சிம்புவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனை…

Read More
1 371 372 373 374 375 425