சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓ.பி.எஸ் அணியிலுள்ள 12 எம்எல்ஏக்களும் தீர்மானத்தை ஆதரிக்காததாலும், ஆளுங்கட்சிக்கு 122 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதாலும், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) முன்மொழிந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. அமளியான சட்டப்பேரவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி…
Read More









