கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி – சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி – சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்க்க முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பணம் தந்தார் என பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார் என குற்றம் சாட்டியுள்ளார். மட்டுமின்றி இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன்பிடிக்க,…

Read More

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்

தேர்தல் ஆணையரை சந்திக்க நாளை (புதன்கிழமை) டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம். டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை புதன்கிழமை பகல் 12 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணி மனு அளித்தது. இதையடுத்து, இம் மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன் படி கடந்த 10-ம் தேதி, 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அதில், அதிமுக சட்டவிதிகளின்படியே…

Read More

தான் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை சுரேஷ் மேனன் விளக்கம்

தான் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை சுரேஷ் மேனன் விளக்கம்

சில மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநரும், நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் சந்திர மேனன் காலமாகிவிட்டதாக செய்திவெளியானது. இந்நிலையில் தான் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்திகள் பொய்யானவை என சுரேஷ் மேனன் மறுத்துள்ளார்.”நான் செத்தெல்லாம் போய்விடவில்லை.நிம்மதியாக காபி குடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த செய்தி முற்றிலும் தவறு ” என சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார். மேலும்  அவர் கூறும்போது, தான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். அப்போது அந்த முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்திற்காக அப்போது எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். பல…

Read More

‘‘என்னை, ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்’’ நடிகை சுருதிஹாசன்

‘‘என்னை, ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்’’ நடிகை சுருதிஹாசன்

‘‘சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் ஓடாததால் என்னை ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தி ஒதுக்கினார்கள்’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– ‘‘நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். 3 வருடங்கள் கஷ்டப்பட்டேன். அப்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தனது கப்பார்சிங் படத்தில் தைரியமாக என்னை நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் எனது வாழ்க்கையே மாறியது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனது தந்தை கமல்ஹாசனுடன் சபாஷ்நாயுடு படத்தில்…

Read More

நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை

நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை

திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனா, கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். ஓடும் காரில் அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் விபரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. மேலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து…

Read More

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்டியிடு கிறார். சசிகலா அணியில் வேட் பாளரை தேர்வு செய்வதற்காக 15-ம் தேதி ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. ஓபிஎஸ் தரப்பும் புதிதாக ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளது….

Read More

விரைவில் தேர்தல் வரும் என்று கூறிய கமல்ஹாசனின் கனவு பலிக்காது வைகைசெல்வன் பேட்டி

விரைவில் தேர்தல் வரும் என்று கூறிய கமல்ஹாசனின் கனவு பலிக்காது வைகைசெல்வன் பேட்டி

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆட்கள் வேண்டும்.தமிழகத்தில் மேலும் 4 ஆண்டுகள் ஆட்சி தொடரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன் என்றும் கூறினார். சட்டத்தைக் காரணம் காட்டி கட்டாய திருமணம் போல 4 ஆண்டுகள் ஏன் ஆட்சியைத் தொடரவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக இன்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் தலைமை கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய் வதற்காக மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாகும். ஆனால் நடிகர் கமல்ஹாசன் விரைவில் தேர்தல் வரும் என்று கூறுகிறார். அவர் கனவு…

Read More

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மக்கள் நலக்கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் ஓ.பி.எஸ் அணி இன்று மாலை சந்திப்பு

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மக்கள் நலக்கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் ஓ.பி.எஸ் அணி இன்று மாலை சந்திப்பு

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, ஓ.பன்னீர் செலவம் அணியினர் போட்டியிட முடிவு செய்து தங்கள் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தி.மு.கவை ஆதரித்தால் வரவேற்போம்’ என ஸ்டாலின் மக்கள் நலக்கூட்டணியிடம் தனது ஆதரவை கேட்டு இருந்தார். இதை தொடர்ந்து…

Read More

ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்

ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ்: தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம்

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து…

Read More

கோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம்

கோவாவில் முதலிடம் பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம்

40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்களும், பா.ஜனதாவுக்கு 13 இடங்களும், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்ததால் அந்த கட்சி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா…

Read More
1 374 375 376 377 378 425