முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ….

Read More

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

டெல்லியில் நடந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர் வண்ணதாசன். இவர், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார். இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதை…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா திடீர் தயக்கம் காட்டுகிறார்.  ஆர்.கே.நகர் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக  குற்றச்சாட்டுகளை  கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து…

Read More

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

புதிய முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இழந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தான் குடியிருந்து வரும் அரசு பங்களா வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் நுழைவுவாயில் முன்பு இருந்த அறிவிப்பு பலகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் உடனடியாக அரசின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு விரைவில் புதிய வீட்டில் குடியேற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர். தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையிலேயே வாடகை வீட்டை அவர் தேடி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்த நேரத்திலும், அவருடைய இல்லத்தின் நுழைவுவாயிலில்…

Read More

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும் அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என ராசிபுரம் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் கூறினார். முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முதன் முதலாக ராசிபுரம்  வந்தார். அவருக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:- முதன் முதலாக என்னை வெற்றி பெற செய்து அரசியலுக்கு அறிமுகப் படுத்திய ராசிபுரம் தொகுதி மக்களுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி…

Read More

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் தனது கார் டிரைவர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ரவுடிகளைத்தான் தங்களின் பாதுகாவலர்களாகவும், டிரைவராகவும் நியமித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. முன்னணி நடிகையான நயன்தாராவிடம் சேது என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் நயன்தாராவுக்கு பாதுகாவலராகவும் உள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள…

Read More

என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

என்னை மதிப்பிடும் நேரமா இது? கோலி கேள்வி!!

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக எனது திறமையை மதிப்பிட அதற்குள் இப்போது என்ன அவசரம் என்று விராட் கோலி கேள்வி எழுப்பியுள்ளார்.  தனது கேப்டன் பதவி குறித்து கோலி பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவதையே முதல் குறிக்கோளாக வைத்துள்ளேன். விளையாட்டு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் செயல்பாடை பொறுத்தே அதன் கேப்டனின் திறமையும் மதிப்பிடப்படும். அணி சரியாக ஆடாத போது தலைமைத்துவம் என்பது கட்டுப்பாட்டை இழக்கும். எனவே இந்திய அணியின் கேப்டனாக அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்கு நானே தொடர்ந்தால் எனது தலைமைத்துவத்தை மதிப்பீடு செய்வேன். இப்பொழுது…

Read More

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4…

Read More

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ் படத் தயாரிபாளர் சங்க ேதர்தல் நடத்தும் அதிகாரியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். பின்னர் ேதர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் நடிகர் விஷால் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்தார். பின்னர் நடிகர் விஷால் மனுவை ஏற்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்தார். இதை எதிர்த்து  தயாரிப்பாளர் கேயார் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிட…

Read More

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

தொலைநோக்கு பார்வை அவசியம்: அமெரிக்காவுக்கு மோடி வலியுறுத்தல்

புதுதில்லி: சீரான மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, தேர்தல் பிரசாரத்தின் போது தான் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான எச்1பி விசா பெறுவதற்கான விதிமுறைகளில் சீர்திருத்தத்தை டிரம்ப் மேற்கொண்டார். அதன்படி, எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் பணிபுரிய வரும் பணியாளர்கள் எச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1,30,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000…

Read More
1 382 383 384 385 386 425