இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம் என்று தீபா சூளுரைத்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என்றும் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது: ”ஜெயலலிதாவின் பணிகளை அரசியல் வாரிசாகத் தொடர்வேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையாக உள்ளது. இரட்டை இலையை மீட்பதே எங்கள் குறிக்கோள். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர்….
Read More









