தனுஷ் என்னை தாக்கவில்லை: பாடகி சுசித்ரா புது விளக்கம்
தனுஷ் என்னை தாக்கவில்லை, எனது கை ஒரு குழுவால் தாக்கப்பட்டது என பாடகி சுசித்ரா புது விளக்கமளித்துள்ளார். பிப்ரவரி 20-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் தனது காயம்பட்ட கையின் புகைப்படத்தைப் பகிர்ந்த சுசித்ரா, “இது தனுஷ் குழுவின் மோசமான கையாளால் ஆன காயம். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், “இது சுச்சிதான், நான் மீண்டும் வந்துவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். தனுஷ் என்னிடம் ஆடிய தரக்குறைவான விளையாட்டைப் பற்றி அனைவரிடமும் கூற தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டார். சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார், சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் ”சுசித்ராவின் ட்விட்டர் பக்கம் இன்று மீட்கப்பட்டது….
Read More









