நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

இதயம் கனிந்த ஆதரவு… இது வர்த்தகர்கள்;, கலைஞர்கள் நிறுவனங்கள் ஊடகங்கள் வழங்கியது.. இங்கு நிறையவே புகைப்படங்கள் இல்லை. நினைவுகள். முகநூல்ப் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஆனால் எங்களிடம் மொழி உள்ளது. அதனால் வாழ்த்துகின்றோம்.. சீனக் கலாச்சார மண்டபம் என்றபடியால் , வெறு வயிற்றுடன் வீடு செல்ல வேண்டிவரும் என்று வெளியில் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்களாம். ஆனால் சதேர்ன் அரோமாவின் இரவு உணவு தியேட்டருக்கு பின்னால் உள்ள மண்டபத்தை ஒரு நவீன பேங்குவற் ஹோல் தரத்திற்கு உயர்த்தி பரிமாறப்பட்டது, அதுவும் மிகவும் கௌரவமாகவும்.. வீடு செல்லும் போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது. நினைவுகள் நிகழ்வு நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

Read More

TWO BRANCHES OF “SARAVANAA BHAVAN” INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH.

TWO BRANCHES OF “SARAVANAA BHAVAN” INDIAN RESTAURANT IN CANADA, CELEBRATED ANNUAL GET TOGETHER AND APPRECIATION NIGHT IN SCARBOROUGH.

The colorful event took place yesterday at Scarborough Convention Centre. The two branches are located in Mississauga and Scarborough. கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் “சரவணா பவான் உணவகத்தின் இரண்டு கிளைகளும் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள மண்டபத்தில் தமது வருடாந்த ஒன்றுகூடலையும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வையும் நடத்தின.. நிறுவனத்தின் அதிபர் திரு கணேசன் சுகுமார் மற்றும் பொது முகாமையாளர் திருமதி மீரா ஆகியோர் தமது சகாக்களுடன் சேர்ந்து மேற்படி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கனடாவின் மிசிசாகா மற்றும் ஸ்காபுறோ ஆகிய நகரங்களிலேயே மேற்படி இரண்டு கிளைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் கௌரவிப்பு மற்றும்…

Read More

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவர் பலி-தமிழக அரசு கண்டனம்

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: ராமேசுவரம் மீனவர் பலி-தமிழக அரசு கண்டனம்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று இரவு (திங்கள்கிழமை இரவு) துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மீனவர் ஒருவர் உயிரிழந்தார். ராமேசுவரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன்பிடிக்க நேற்று மாலை கடலுக்குச் சென்றனர். இவர்கள் இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ (21) என்பவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை கைவிட்டு அவசர அவசரமாக கரைக்குத் திரும்பினர். இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு மீனவர் சரன்…

Read More

ஜெ. மரணம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ அறிக்கைகளில் தெளிவான பதில் இல்லை: முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

ஜெ. மரணம் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ அறிக்கைகளில் தெளிவான பதில் இல்லை: முன்னாள் அமைச்சர் செம்மலை கருத்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு எய்ம்ஸ், அப்போலோ மருத்துவமனை அறிக் கைகளில் எந்த பதிலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.செம்மலை கூறினார். முன்னாள் சுகாதாரத் துறை அமைச் சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரு மான எஸ்.செம்மலை எம்எல்ஏ, இது தொடர்பாக ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ், சென்னை அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ அறிக் கையை தமிழக சுகாதாரத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் வெளி யிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அடிக் கடி மருத்துவ அறிக்கை வெளியிடுவதும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்களின் செய்தியாளர்…

Read More

ஜெயலலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் உண்ணாவிரதத்துக்கு போலீஸார் அனுமதி

ஜெயலலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் உண்ணாவிரதத்துக்கு போலீஸார் அனுமதி

சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு அளிப்பதற்காக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நடத்திக்கொள்ள போலீ ஸார் அனுமதியளித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெய லலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், எனவே நீதி விசாரணை நடத்த வேண்டு மெனவும் வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் நாளை (மார்ச்…

Read More

தீபா பேரவை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சென்னைக்கு அழைப்பு: ஓபிஎஸ் அணியில் சேருவதைத் தடுக்க தீபா கணவர் முயற்சி

தீபா பேரவை அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சென்னைக்கு அழைப்பு: ஓபிஎஸ் அணியில் சேருவதைத் தடுக்க தீபா கணவர் முயற்சி

தீபா பேரவையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அதிருப்தியடைந்த வர்கள் ஓபிஎஸ் அணியில் சேரு வதைத் தடுக்க, தன்னை சந்திக்க சென்னைக்கு வருமாறு தீபாவின் கணவர் மாதவன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவிலுள்ள ஒரு தரப்பினர் செயல்பட்டனர். தீபா பேரவைக்கு உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து வந்தனர். மாவட்டந்தோறும் பொறுப்பாளர் கள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதாக கூறப்பட்டது. பதவி கிடைக்காததால் அதி ருப்தியடைந்த பலர் ஓபிஎஸ் அணியில் இணையப் போவதாக தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக 3 அல்லது…

Read More

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக போட்டியிடுவது ஏன்?- விஷால் விளக்கம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவராக போட்டியிடுவது ஏன்?- விஷால் விளக்கம்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது ஏன் என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இதில் விஷால் தலைமையில் போட்டியிடவுள்ள அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அச்சந்திப்பில் விஷால் பேசியதாவது, “பொதுவாகவே தமிழ் திரையுலகில் நிறைய சங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் தயாரிப்பாளர் சங்கம் மட்டும் நன்றாக இருந்தால் ஒட்டுமொத்த திரையுலகமே நன்றாக இருந்திருக்கும். நான் ஏன் தலைவராக போட்டியிடுகிறேன் என்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதல் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் நலனுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை எதுவும் நிறைவேறவில்லை என்பது. தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன். அவர்கள்…

Read More

போயஸ் கார்டனில் தீபக், தீபா பேரவையினர் முற்றுகையா? போலீஸ் குவிப்பு

போயஸ் கார்டனில் தீபக், தீபா பேரவையினர் முற்றுகையா? போலீஸ் குவிப்பு

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை தீபக், தீபா பேரவையினர் முற்றுயிடப்போவதாக தகவல் வெளியானதால் போலீஸ் குவிக்கபட்டனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடந்த 23-ந் தேதி பேட்டியளிக்கும் போது போயஸ் கார்டன் வீடு தனக்கும் தீபாவுக்கும் மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது, என்று அறிவித்தார். ஆனாலும் போயஸ் கார்டன் வீடு இது வரை நினைவு இல்லமாகவும் மாற்றப்பட வில்லை, அவரது அண்ணன் பிள்ளைகளுக்கும் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் போயஸ்…

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதையும், வாங்குவதையும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கவும், இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வசதியாக சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் கருவியாக திகழ்வது தேர்தல்கள்தான். ஆனால், தேர்தல் களம் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் சந்தையாக மாறியிருப்பது…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி மூன்று வார காலமாக மக்கள் ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலவளம், நீர்வளம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்கின்றனர். நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்த போது திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று வாய்மொழியாக உறுதிமொழி கொடுத்துள்ளாரே தவிர,…

Read More
1 377 378 379 380 381 425