தி.மு.க தொடர் அமளி சட்டசபை 2 வது முறையாக 3 மணி வரை ஒத்தி வைப்பு
தி.முக உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்து சபாநாயகர் மீண்டும் சட்டபேரவையை 3 மணி வரை ஒத்திவைத்தார். கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது. தொடங்கியது சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டசபை கூடியதும் சபாநாயகர், சபை கூடியதற்கான காரணங்களை தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியின் கொறடா செம்மலை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். திமுக, ஓ. பன்னீர்ச் செல்வம் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எடப்பாடி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது.சட்டசபையில் ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சிகள் ரகசிய ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழி…
Read More









