அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் 26-3-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 18 , 19-ந்தேதிகளில் மாலை 3 மணி வரை நடக்கிறது. 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. 21-ந்தேதி (செவ்வாய்கிழமை)…
Read More









