தைவானில் அமெரிக்க சபாநாயகர்: சினமடைந்த சீன ராணுவம் பயிற்சி
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் பலத்த எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த சீனா, அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியதுடன், தைவானை சுற்றி ராணுவ பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. பெலோசியின் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எதிர்ப்புகளை மீறி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஸ்பெர்19 விமானத்தில் சபாநாயகர் பெலோசி தைவான் சென்றடைந்தார். 25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க…
Read More









