எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வாயிலாக நெருக்கடி தரப்படும் என மிரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (ஆக.25)…

Read More

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

ஆம்ஆத்மியின் புகைப்படத்தை ‘அபேஸ்’ செய்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள யாத்திரை பிரசாரத்திற்காக அக்கட்சி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தங்களுடையது எனக்கூறி ஆம்ஆத்மி கட்சி கிண்டலடித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் வரும் செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‛பாரத் ஜோடோ யாத்திரை’ (இந்திய ஒற்றுமை நடைபயணம்) என்ற பெயரில் யாத்திரை செல்ல உள்ளார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். டில்லியில் இன்று (ஆக.,23) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத் ஜோடோ யாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியிட்டனர்….

Read More

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து – 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து – 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!

ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் இன்று பயங்கர வெடிவிபத்து மற்றும் தீ விபத்துகளும் ஏற்பட்டன. ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி நிலையம், மின் கம்பிகள், ரெயில் பாதைகள் மற்றும் சில அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்து 2000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்ட்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் 9ம் தேதியன்று கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமானதளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு…

Read More

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்

அமெரிக்காவில் கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ‘வென்டிலேட்டர்’ அகற்றப்பட்டது. பேசும் நிலைக்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம் 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. ‘ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார். இதையடுத்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 10…

Read More

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி…!

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி…!

டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். டெல்லி, இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி…

Read More

தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை

தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை

மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர். ‘சர்வதேச செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டி, சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன், ஜூலை 28ல் துவங்கியது. சர்வதேச செஸ் வீரர்களை, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு வரவேற்று உற்சாகப்படுத்தியது. பிரதமர் மோடி போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாமல்ல புரத்தில் உள்ள ‘போர் பாயின்ட்ஸ்’ விடுதியில், 29ல் போட்டி துவங்கியது. 184 நாடுகளின், 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டிக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன. முதல் அரங்கில், 49…

Read More

மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

அதிபர் மாளிகையில் சில ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்றதாக புகார் எழுந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொகுசு பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப்பிற்கு சொகுசு பங்களா உள்ளது. இங்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனப்படும், அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து ரெய்டு நடத்தினர். ரெய்டு குறித்து எப்.பி.ஐ., வட்டாரங்கள் கூறுகையில், டெனால்டு டிரம்ப்…

Read More

5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி

நம் அண்டை நாடான சீனா, தைவான் ஜலசந்தியில், நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த போர் பயிற்சியை ஐந்தாவது நாளாக நேற்றும் நடத்தியது. தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டுடன் இணைக்க, நம் அண்டை நாடான சீனா முயற்சித்து வருகிறது. ஆனால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 4ம் தேதி முதல், 7ம் தேதி வரை, தைவான் ஜலசந்தியில் சீன ராணுவம் போர் பயிற்சி செய்வதாக அறிவித்து, ஏவுகணைகளை ஏவி தைவானை அச்சுறுத்தியது. இதற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், சீனா…

Read More

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் – டிடிவி தினகாரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் – டிடிவி தினகாரன் பேட்டி

எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் என்று டிடிவி தினகாரன் கூறினார். சென்னை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வரும் ஆகஸ்ட்15-ஆம்தேதி அமமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்வதால், இவரும் ராஜபக்சே போல அந்த தொண்டர்களால் விரட்டப்படுவார். மழைக்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு, பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும், மக்களின்…

Read More

இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

இந்தியா செய்தி  குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

புதுடில்லி-குரங்கு அம்மை தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்வது தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. உலகெங்கும், 75க்கும் மேற்பட்ட நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், இதுவரை, ஒன்பது பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகி உள்ளது.இதையடுத்து, குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முக கவசம் அணிவது, கிருமிநாசினி வாயிலாக சுத்தப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளோர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த நோய் தொற்று பரவலை தடுப்பது குறித்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய…

Read More
1 58 59 60 61 62 425