தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு

தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளதாக’ விமர்சித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைச்சர்களின் பேச்சுகள், கையை வெட்டிருவேன், காலை வெட்டிருவேன், சுலுக்கு எடுத்துருவேன், ரவுடி போன்ற பேச்சுகளை பேசுகின்றனர். அடுப்புக்கறி பாத்திரங்களை பார்த்து நீ கருப்பு என சொல்வது போல, அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ., தொண்டர்களை பார்த்து குண்டர்கள் எனக் கூறுகிறார். இதனை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும்…

Read More

மேற்குவங்கத்தில் பல்கலை.வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்

மேற்குவங்கத்தில் பல்கலை.வேந்தராக முதல்வரை நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பல்கலை வேந்தராக, முதல்வரே பதவி வகிக்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்க பல்கலைகளின் வேந்தராக கவர்னர் ஜகதீப் தன்கர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மாநில முதல்வரே பல்கலை வேந்தர் பதவியை வகிக்க, மேற்கு வங்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த மே 26-ல் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்கலை சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக சட்ட திருத்த மசோதா சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பிரதிய பாசு தாக்கல் செய்தார். இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மசோதாவுக்கு ஆதரவாக 183 உறுப்பினர்களும், எதிராக…

Read More

முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மோதியின் மெளனம் பற்றி ஹமீது அன்சாரி கருத்து

முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்து: மோதியின் மெளனம் பற்றி ஹமீது அன்சாரி கருத்து

முகமது நபி தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் தெரிவித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவது தற்செயலானதல்ல, அதில் ஏதோ அர்த்தம் உள்ளது என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி ஹிந்தி சேவையிடம் கருத்து தெரிவித்த ஹமீது அன்சாரி, “இது மிக முக்கியமான விஷயம்” என்று கூறினார். அரபு நாடுகளுடனான பிரதமர் மோதியின் உறவைப் பற்றி ஹமீது அன்சாரி குறிப்பிடுகையில், “பல நாடுகளுடன் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் இந்த விஷயத்தில் காத்து வரும் மௌனம், தற்செயலானது அல்ல. ஒன்று பிரதமர் அதில்…

Read More

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் கவலைக்கிடம்

பாகிஸ்தானில் 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷாரப், 79. இவர் கடந்த, 2007ல், அதிபராக இருந்தபோது, பாகிஸ்தானில் அவரச நிலையை அமல்படுத்தினார். இது தொடர்பாக, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய் நகருக்கு சென்ற அவர், 2016ல் இருந்து, அங்கேயே வசித்து வருகிறார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முஷாரப், துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை…

Read More

நாடு முழுதும் போலீசாருக்கு… ஒரே சீருடை ! மத்திய அரசு அதிரடி திட்டம்

நாடு முழுதும் போலீசாருக்கு… ஒரே சீருடை ! மத்திய அரசு அதிரடி திட்டம்

ஒரு நாடு, ஒரே ரேஷன்; ஒரு நாடு, ஒரே ஓய்வூதியம் என, மத்திய அரசு பல திட்டங்களை ஒரே மாதிரியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, ‘ஒரு நாடு, ஒரே போலீஸ் சீருடை’ திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு ௨௦௧௪ல் பதவியேற்றது முதல், பல திட்டங்களை நாடு முழுதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு நாடு, ஒரே ரேஷன்; ஒரு நாடு, ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் அடிக்கடி தேர்தல் நடப்பதை தடுக்கும் வகையில், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த…

Read More

ரூபாயில் சர்வதேச வர்த்தகம்: பிரதமர் மோடி விருப்பம்

ரூபாயில் சர்வதேச வர்த்தகம்: பிரதமர் மோடி விருப்பம்

புதுடில்லி : ”சர்வதேச அளவிலான வர்த்தகம் மற்றும் பொருட்கள் வினியோக முறைகளில், இந்திய வங்கிகள் மற்றும் ரூபாய் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு கட்டமாக, ஒரு வார சிறப்பு கொண்டாட்டத்துக்கு, மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘ஜன் சமர்த்’ எனப்படும் மத்திய அரசின் கடன் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான இணைய தளத்தை மோடி துவக்கி வைத்தார். மேலும், 75வது சுதந்திர தினத்தையொட்டி, 1, 2, 5, 10, 20 ரூபாய் மதிப்புள்ள புதிய நாணயங்களையும் அவர் வெளியிட்டார். பார்வை…

Read More

சகலவசதிகளுடன் சுகமான வாழ்க்கை: அதிர வைக்கும் சிறப்பு முகாம் நபர்களின் பின்னணி: இவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!

சகலவசதிகளுடன் சுகமான வாழ்க்கை: அதிர வைக்கும் சிறப்பு முகாம் நபர்களின் பின்னணி: இவர்களுக்கு குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்!

கோவை: திருச்சி சிறப்பு முகாமிலுள்ள வெளிநாட்டு நபர்களை விடுவிக்க அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெளிநாடு தப்பி செல்லுதல், ஆன்லைன் பண மோசடி, போலி பாஸ்போர்ட் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இவர்கள் மீதுள்ள நிலுவை வழக்கில் ஜாமின் பெற்று அல்லது வழக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் தாயகம்…

Read More

உக்ரைனுக்கு நவீன ராக்கெட் : அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைனுக்கு நவீன ராக்கெட் : அமெரிக்கா ஒப்புதல்

ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்திலான நடுத்தர ராக்கெட்டுகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய படைகளை சமாளிக்க உக்ரைனுக்கு 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்க பார்லி., ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உக்ரைனின் மிக முக்கியமான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதை தடுப்பதற்காக நவீன ஆயுதங்களை உடனடியாக வழங்கும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவை வற்புறுத்தி வந்தார். இதை ஏற்று ”உக்ரைனுக்கு நவீன தொழில்நுட்பத்தில் நடுத்தரமான…

Read More

2.9 சதவீத மாணவியரிடம் புகையிலை பழக்கம்; அமைச்சர் ‘பகீர்’ தகவல்

2.9 சதவீத மாணவியரிடம் புகையிலை பழக்கம்; அமைச்சர் ‘பகீர்’ தகவல்

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.9 சதவீத மாணவியர், 6.6 சதவீத மாணவர்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:இந்தியாவில், தினசரி 2,500 பேர் புகையிலை பாதிப்புகளால் உயிர் இழக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால், உலகம் முழுதும், ஆண்டுக்கு 20 கோடி பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.பல்வேறு ஆய்வுகளின்படி, தமிழகத்தின் 31 சதவீதம் ஆண்கள்; 9.3 சதவீதம் பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். மேலும், 13 முதல் 15 வயது வரையிலான 6.6 சதவீத மாணவர்கள்; 2.9…

Read More

தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்

தமிழக பயணம் மறக்க முடியாதது: பிரதமர்

புதுடில்லி: தமிழகத்திற்கு நன்றி, நேற்றைய பயணம் மறக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நேற்று(மே 26) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் பிரதமர் வந்தார். வழிநெடுகிலும், பா.ஜ.,வினர் திரளாக திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியும் காரில் மெதுவாக சென்றபடி, பா.ஜ.,வினர் மற்றும் பொது மக்களை பார்த்து மகிழ்ச்சி பொங்க கைகளை அசைத்தார். சிவானந்தா சாலை அருகே மாணவியர் பரதநாட்டியம் ஆடி மோடியை வரவேற்றனர். அவர்களை பார்த்த உற்சாகத்தில் மோடி காரில் இருந்து வெளியே வந்து கை…

Read More
1 61 62 63 64 65 425