விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை
சியோல்-உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி, தென் கொரியா சாதனை படைத்துள்ளது. கிழக்காசிய நாடுகளான தென் கொரியா – வட கொரியா இடையே எப்போதும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், நிலைகளை தெரிந்து கொள்ள, தென் கொரியாவிடம் ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளது. எனவே,…
Read More






