உக்ரைனை நேடோவில் இணைக்க அழுத்தம் கொடுக்க மாட்டோம்: ஜெலன்ஸ்கி

உக்ரைனை நேடோவில் இணைக்க அழுத்தம் கொடுக்க மாட்டோம்: ஜெலன்ஸ்கி

நேடோ அமைப்பில், உக்ரைனை சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் அழுத்தம் கொடுக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: நேடோ அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் வலியுறுத்த மாட்டோம். அவர்களிடம் தானம் பெறும் நாட்டின் தலைவராக இருக்க விரும்பவில்லை. நேடோ அமைப்பு,உக்ரைனை உறுப்பினராக சேர்த்து கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி மீனவர் பிரச்னையை எழுப்ப திட்டம்

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி மீனவர் பிரச்னையை எழுப்ப திட்டம்

நம் அண்டை நாடான இலங்கைக்கு, இம்மாத இறுதியில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந் நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க உள்ளார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட, இலங்கை அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது.இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில்…

Read More

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடி 2-வது நாளாக ஆலோசனை

உக்ரைன்-ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 9-வது நாளாக இன்றும் ரஷியா படைகள் ஆக்ரோ‌ஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கீவ் நகரில் உள்ள அரசு கட்டிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், காவல் துறை அலுவலகங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருந்தவர்கள் வெளியேறி உள்ளனர். உக்ரைனின் கார்கிவ், கீவ் நகரங்களைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் நடந்தாவது மேற்கு நகரங்களின் எல்லைக்கு வந்துவிடுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது. முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் போர் மண்டலத்திலிருந்து தப்பிக்க தங்கள் குழந்தைகளுடன் எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்று உள்ளனர். ரஷியாவின் உக்கிர தாக்குதலில் நகரம் முழுவதும்…

Read More

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றியது ரஷியா

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இன்று காலை ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும்….

Read More

உக்ரைன் விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை

உக்ரைன் விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை

உக்ரைன்- ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி ஆலோசனை இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனை…

Read More

காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்

காற்று மாசை குறைக்க தவறினால் நிலைமை மோசமாகும்

‘உலகில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருவதால் அடுத்த, 18 ஆண்டுகளில் மக்கள் நோய், பசி, பட்டினி, வறுமையால் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என, ஐ.நா., எச்சரித்துள்ளது. ஐ.நா., விஞ்ஞானிகள் குழு, பருவ நிலை மாற்ற அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் ஆண்டுகளில் பருவ நிலை மேலும் மோசமாகும். உலகில் கரியமில வாயு வெளியேற்றத்தால் வெப்பம் அதிகமாகும். இந்நிலையில், வெப்ப அளவு இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, தற்போது 1.5 டிகிரியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Read More

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 366 ஆக குறைவு ; 1,013 பேர் நலம்

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 366 ஆக குறைவு ; 1,013 பேர் நலம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,013 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (பிப். 27 ம் தேதி) 439பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று (பிப்.28ம் தேதி) பாதிப்பு 366 ஆக குறைந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 55,994 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 366 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,49,373 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6,43,98,334 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கோவிட் உறுதியானவர்களில் 209 பேர்…

Read More

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி அளிக்க தயார்; உலக வங்கி அறிவிப்பு

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என கூறியது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடும் என்ற சூழலில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய தூதர்களை திரும்ப பெற்றுள்ளன. இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு…

Read More

ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்…

Read More

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்

மோடியுடன் விவாதிக்க இம்ரான் கான் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்கு முடிவு காண பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘டிவி’ விவாதத்தில் பங்கேற்க விரும்புவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இந்தியா – பாக். இடையே கடந்த 75 ஆண்டுகளாக உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில் ‘பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதுடன் ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கைது செய்தால் மட்டுமே பாக்.குடன் பேச்சு நடத்த முடியும்’ என பலமுறை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘டிவி’ பேட்டி ஒன்றில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: எல்லா நாட்டுடனும் வர்த்தக உறவு நீடிக்க வேண்டும் என்று தான் பாக். விரும்புகிறது. இடையே பகை உணர்வு நீடிப்பதால் அந்நாட்டுடன் குறைந்த…

Read More
1 64 65 66 67 68 425