சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்
சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி…
Read More








