வங்கதேசத்தில் வன்முறை- 25 பேர் பலி; பிரதமரின் பேச்சுக்கு பிறகு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரி வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 25 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரின் உடல்கள் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. வங்கதேச அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளது. மெட்ரோ ரயில்கள் உட்பட போக்குவரத்து சேவை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளன. சட்டம்…
Read More









