பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும்

கொரோனா தொற்றுநோய் பயங்கரமாக பாதிக்கும் இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்புக்காவும், நோயுற்றோர் குணமடையவும் மற்றும் உலகத்தார் அமைதியோடு நல்வாழ்வு வாழவும் பகவன் தன்வந்த்ரிக்கு மே 23ஆம் தேதி பிரார்த்தனை நடத்தப்படும் !! 23ஆம் தேதி தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை & அபிஷேகத்துடன் நடத்தப்படும் இந்த பிரார்த்தனையில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் !! தன்வந்திரி பூஜையில் பங்கேற்க +1 647 9644790 என்ற நம்பருக்கு உங்களின் & குடும்பத்தாரின் பெயர்,நக்ஷத்திரம் & கோத்திரம் (தெரிந்த விவரங்களை அனுப்புக ) விவரங்களை வாட்ஸாப்ப் செய்யவும் !! இந்த பிரார்த்தனை விவரத்தை அனைவரோடும் பகிர்ந்து பயனடய செய்யுங்கள் !! இந்த நன்னாளில் பிராமண தானம் / அன்ன தானம் /…

Read More

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, 1) அன்பு — கமிஷனர், திருநெல்வேலி — ஐ.ஜி., தெற்கு மண்டலம், 2) மதுரை தீபக் டி தாமோர் — ஐ.ஜி., மத்திய மண்டலம் திருச்சி — கமிஷனர், கோவை 3) வித்யா ஜெயந்த் குல்கர்னி — கூடுதல் கமிஷனர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை — இணை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை 4) பவானீஸ்வரி — கூடுதல் கமிஷனர், போக்குவரத்து, சென்னை — ஐ.ஜி., சிறப்பு புலனாய்வு பிரிவு, லஞ்ச ஒழிப்பு துறை, சென்னை.

Read More

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது நிறுவனத்தின் நிற வெறி !!

ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது நிறுவனத்தின் நிற வெறி !!

நிறவெறி சர்ச்சை காரணமாக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது தற்போது சந்தித்து வரும் சர்ச்சை என்ன? – சற்றே விரிவாகப் தெரிந்துகொள்வோம். ஹாலிவுட் பாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் திரை மற்றும் சின்னத்திரையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை வழங்கி வருகிறது. 1944-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கோல்டன் குளோப்’ விருதை பெற்றுள்ளார். அந்த அமைப்பில் பத்திரிகை மற்றும் புகைப்படக்…

Read More

இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் – ஜெருசலேம் வன்முறை

இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் இடையே தொடரும் மோதல் – ஜெருசலேம் வன்முறை

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. இது ஒருபுறமிருக்க பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் கடந்த மாதம் மையப்பகுதியில் இருந்தே அவ்வப்போது கடுமையான மோதல்கள் ஏற்பட்டது. பாலஸ்தீனியர்கள் தங்கள் மதத்தின் புனித மாதமாக…

Read More

ஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் !!

ஹிந்து அறநிலைய துறை ஸ்ரீரங்கம் கோவிலில் துஷ்ப்ரயோகம் !!

கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையானது, ஸ்ரீரங்கம் ரங்க நாராயண மடம். வைணவத்தை வாழ்வித்த ஸ்ரீ ராமானுஜரால் உருவாக்கப்பட்ட மடம் இது. ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலும், அருட்பணியிலும், இந்த மடத்தின் ஜீயர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களில், 50வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018 ஜூலை 11ல் காலமானார். மூன்று ஆண்டுகளாக, இந்த மடத்துக்கு, அடுத்த ஜீயர் எவரும் தேர்வு பெறவில்லை. இந்நிலையில் தான், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அலுவலக உதவியாளர், டைப்பிஸ்டை தேர்வு செய்வது போன்று, ஒரு மடத்தின் ஜீயரை தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது, ஆன்மிக பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

Read More

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்

தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான ஓங்காரநந்த ஸ்வாமி 62,மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில்…

Read More

ஏ.கே – 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி: ரஷ்ய அதிபர்

ஏ.கே – 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி: ரஷ்ய அதிபர்

கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரசை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பூசியை (ஸ்புட்னிக் வி) கண்டுபிடித்த ரஷ்யா, அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், தற்போது ரஷ்யா மற்றுமொரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ என்னும் தடுப்பூசி, ஒரு டோஸ் செலுத்திக் கொண்டாலே…

Read More

தமிழ் திரையுலகம் அதிர்ச்சி !! ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்

தமிழ் திரையுலகம் அதிர்ச்சி !! ஒரேநாளில் மேலும் மூன்று பேர் மரணம்

தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக மறைந்து வருகின்றனர். கடந்த மார்ச் 14ல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப்., 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப்.,30 அன்று கொரோனா…

Read More

கமல் கட்சிக்கு பை பை !! காலியாகும் கூடாரம் !! ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் – தமாஷ் !!

கமல் கட்சிக்கு பை பை !!  காலியாகும் கூடாரம் !! ஆவேசத்தில் உலரும் கமலஹாசன் – தமாஷ் !!

நடிகர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலிருந்து அதன் துணை தலைவர் மகேந்திரன் விலகினார். இவரைத்தொடர்ந்து பொன்ராஜ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய கமல், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்தார். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் கமல் தோற்றார். இந்நிலையில் கட்சி துணை தலைவர் மகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான…

Read More

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை இன்னமும் உலுக்கி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜுலை மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் தொற்று பரவலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்…

Read More
1 93 94 95 96 97 425