சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க முடிவு செய்து இருந்தார். இதன்படி, பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோல் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை துவங்கினர். சசிகலா தரப்பில் 15 நாட்கள் பரோல் கேட்கப்பட்டது. இதையடுத்து,  15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் செல்கிறார். கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே  இந்த முறையும்  விதிக்கப்பட்டு உள்ளது.

Read More

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். கடந்த பல மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்  இன்று காலை 20.3.18 செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 75. சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நடராஜன், இன்று 20.3.18 செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் இறந்தார். அவரின் உடல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிறகு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அருகில் உள்ள விளார் கிராமத்திற்கு அஞ்சலிக்காவும் இறுதிச் சடங்கிற்காகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவரைப் பார்ப்பதற்காக சசிகலா…

Read More

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விஎச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை தமிழகத்தின் பல பகுதிகளுக்களிலும் செல்ல திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. இவ்விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர்அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு…

Read More

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்து உள்ளது. மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும்…

Read More

பன்னீர்செல்வம் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

பன்னீர்செல்வம் நெருக்கடி: வருமா அமைச்சரவை மாற்றம்?

அ.தி.மு.க.,வில், நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பதில் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி. இதனால், அணியாக செயல்பட்டபோது, தன்னோடு கூட இருந்தவர்கள் பலருக்கும் கட்சியில் பொறுப்பு அளிக்காததால், அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து, அவர், பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி கொடுக்கவே, நீளமான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என, முதல்வர் பழனிச்சாமிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இருந்து தொழிலதிபர் கலாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக 2004-06ம் ஆண்டு வரை இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது இல்லத்துக்கு அருகே தனியாக தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் ஒன்று அமைத்து சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக தயாநிதி மாறன், கலாநிதி…

Read More

அ.தி.மு.க சிங்கம்; டிடிவி தினகரன் கொசு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அ.தி.மு.க சிங்கம்; டிடிவி தினகரன் கொசு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பது தவறு.  கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், படிப்படியாக நிறைவேற்றப்படும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம், அதன் பிரதிபலிப்பாகவே பட்ஜெட் இருக்கும் . துயரத்தின் வெளிபாடாகவே திமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து வருகை. சிறப்பு கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவை தான் முடிவு செய்யும். அதிமுக என்ற சிங்கத்தின் மீது ஒரு கொசு உட்கார்ந்து சென்று விட்டதாக டிடிவி…

Read More

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’: கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’: கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்

மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார். அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தனது கட்சிப் பெயரை அவர் அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கணிசமான அளவு தொண்டர்களையும் டிடிவி தினகரன் திரட்டியிருக்கிறார்….

Read More

குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு,…

Read More

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்?

பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்கும் என்றும் அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அதன்படி, நாளை பேரவை கூடுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த…

Read More
1 114 115 116 117 118 181