மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்” எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய…

Read More

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read More

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வகையிலான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723…

Read More

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

குரங்கணி காட்டுத்தீ மீட்பு பணிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேசிஉள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் மாணவிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் ஆம்புலன்ஸ்களும் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்….

Read More

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை…

Read More

காவிரி வாரிய கூட்டத்தில் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆலோசனை: மத்திய அரசு

காவிரி வாரிய கூட்டத்தில் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆலோசனை: மத்திய அரசு

காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சுமூக தீர்வு காண திட்டம் வகுக்கப்படும். கோர்ட் உத்தரவை அமல்படுத்துவுதற்கான ஆயத்த காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, 192 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீரை 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரத்திற்குள்…

Read More

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பெங்களூரு போலீஸ் முதல் கைது நடவடிக்கை

பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர் கவுரி லங்கேஷ் 6 மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கொண்டும், பிற தகவல்களை கொண்டும் போலீஸ் விசாரணை நடத்தியது. நீண்ட நாட்களாக எந்தஒரு நகர்வும் இல்லாமல் விசாரணை நீடித்தது. கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியது. விசாரணை தொடர்பாக விசாரிக்கும் போலீஸ் துணை ஆய்வாளர் எம் என் அனுசேத், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நவீன் குமார் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக ஐந்து தோட்டாக்கள் வைத்திருந்த வழக்கில் கைதாகி சிறையில்…

Read More

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் – பா.ஜனதா

இடதுசாரிகளுடன் வேறுபாடு உள்ளது, ஆனால் மாணிக் சர்க்காருடன் இணைந்து பணியாற்ற முடியும் – பா.ஜனதா

திரிபுரா மாநில புதிய முதல்-மந்திரியாக பாரதீய ஜனதாவின் விப்லப் குமார் தேப் இன்று பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் மிகவும் எளிமையான முதல்-மந்திரியாக இருந்த மாணிக் சர்க்கார் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறிய அலுவலகத்தில் தங்கிஉள்ளார். எப்போதும் இல்லாத நிகழ்வாக பா.ஜனதா தலைவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்ற மாணிக் சர்க்காரும் இன்று பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொண்டார். திரிபுராவில் பாரதீய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றதும் அக்கட்சியின் தொண்டர்கள்…

Read More

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

மத்திய அரசில் இருந்து வெளியேறுகிறது தெலுங்கு தேசம் – அமைச்சர்கள் இன்று ராஜினாமா

சிறப்பு நிதி வழங்க வாய்ப்பில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கை விரித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் இன்று (வியாழன்) வெளியேறுகிறது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்குதேச அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர். ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தேர்தலைச் சந்தித்தது. அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தேர்தல் முடிந்து இந்த கூட்டணி மத்தியிலும்,…

Read More

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

அரசியலில் வெற்றிடம் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மையே சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியது உண்மை என்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். மதுரவாயலில் ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசும்போது, ‘தமிழகத்தில் நல்ல தலைவனுக்கு, நல்ல தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப நான் வருகிறேன்’ என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்து கொண்டார். ரஜினிகாந்த் கலந்துகொண்ட விழாவில் பங்கேற்றது குறித்து முன்னாள் மேயர் சைதை துரைசாமியிடம் தினத்தந்தி நிருபர் கேட்டபோது, அவர் சளைக்காமல் பதில் அளித்தார்….

Read More
1 115 116 117 118 119 181