ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி தவறான பிரச்சாரம் நடந்தது, ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதன் மூலம். காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது “2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு…

Read More

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ராம மோகன ராவ் ஆஜர்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ராம மோகன ராவ் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்பு, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது. தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார். இதில், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த…

Read More

2ஜி தீர்ப்பில் அரசு உடனே மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்: சு.சுவாமி

2ஜி தீர்ப்பில் அரசு உடனே மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும்: சு.சுவாமி

2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்து, அரசு தன்னுடைய நேர்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஆ. ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச. 12 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார். முன்னாள் மத்திய தொலை தொடர்புத்…

Read More

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு

தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் தொடர்புடைய, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், நாளை தீர்ப்பு வெளியாகிறது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசடி தொடர்பான வழக்கு முடிவுக்கு வருகிறது. தீர்ப்பு அறிவிக்கப்படும் போது, ராஜா உட்பட பலர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் வீடு, கலைஞர், ‘டிவி’ வட்டாரங்களில் பீதி நிலவுகிறது. முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஊழல் நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை…

Read More

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டபின் – தேறுதல் கமிசன் உத்தரவின்படி வீடியோ நீக்கபப்ட்டது

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டபின் – தேறுதல் கமிசன் உத்தரவின்படி வீடியோ நீக்கபப்ட்டது

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று( டிச., 20) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்ந்தபடி பழச்சாறு அருந்துவது போன்ற பதிவு இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, 20 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது. 2016 ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5 ம் தேதி காலமானார். இந்த வீடியோ அதிகாரபூர்வமானது அல்ல என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில்,…

Read More

ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

ஆர்.கே.நகர் யாருக்கு?- இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் அனல் பறந்தாலும் ஆர்.கே.நகரில் யார் வெல்வார் எனபது கேள்விக்குறியாக உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி 1977 முதல் சட்டப்பேரவை தொகுதியாக உள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் அதிமுக 6 முறையும், திமுக 2 முறையும் நேரடி போட்டியில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி அதிமுக, திமுக கூட்டணியில் தலா ஒருமுறை வென்றுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் அதிமுக வசமே ஆர்.கே.நகர் தொகுதி உள்ளது. 2001-ம் ஆண்டு சேகர் பாபு அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 2006-ம் ஆண்டும் அவரே வென்றார். 2011-க்குள் அவர் திமுகவில் சேர்ந்தார். 2011…

Read More

இந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு

இந்திய அமைதி காக்கும் படை ஏன் இலங்கைக்கு சென்றது என்பதன் நோக்கம் நன்கு புலப்படவிலலை. லெப்.ஜெனரல் திபேந்தர் சிங்கர் சண்டிகர் நகரில் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடி க்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இரு ந்தது என்று, இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியா ற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித் துள்ளார். சண்டிகரில் அண்மையில் இந்திய இரா ணுவம் நடத்திய இராணுவ இலக்கிய விழா வில், இலங்கையில் இந்தியப் படையினரின் போர் அனுபவங்கள் தொடர்பாக விபரித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இந்திய அமைதிப்படை முப்படைகளை யும் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படை யின் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில், கடற்படை, விமானப்படையின் பங்களிப்பு குறையத் தொடங்கியது. நாங்கள் ஏன் சென்றோம் என்பது குறித்த தெளிவான அரசியல் நோக்கத்தை இந்திய…

Read More

சேகர் ரெட்டியின் ‘டைரி’ குறிப்பும் அம்பலமான தமிழக அமைச்சர்களின் பெயரும்

சேகர் ரெட்டியின் ‘டைரி’ குறிப்பும் அம்பலமான தமிழக அமைச்சர்களின் பெயரும்

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம். அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல்…

Read More

முன் மொழிந்த 10 பேரை விஷால் சந்தித்தாரா?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கேள்வி

முன் மொழிந்த 10 பேரை விஷால் சந்தித்தாரா?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி கேள்வி

விஷால் வேட்புமனு மட்டுமல்ல மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னை முன் மொழியும் நபர்கள் நம்பிக்கையானவர்கள் தானா? என்பதை நேரில் ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி தெரிவித்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. முன்மொழிந்த 10 பேரில் இரண்டு பேர் தாங்கள் விஷாலை முன் மொழியவில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடியானது. அதன் பின்னர் விஷால் பேசியதை அடுத்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இரவு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏன் இத்தனை குழப்பம், விஷால் மனுவில் தேர்தல் ஆணைய நடைமுறை சரியா? இரண்டுமுறை முடிவுகள் ஏன்…

Read More

பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்

பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமாக சென்ற நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். டாக்டர் அம்பேத்கார் பெயரில் வாக்கு சேகரிக்கும் கட்சிகள், இந்த நாட்டை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பை அழிக்க முயற்சி செய்கின்றன என்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குஜராத் மக்கள் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு குஜராத் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்…

Read More
1 122 123 124 125 126 181