சிறையில் உள்ள சசிகலா- இளவரசியிடம் விசாரணை வருமான வரித்துறை தீவிரம்

சிறையில் உள்ள சசிகலா- இளவரசியிடம் விசாரணை வருமான வரித்துறை தீவிரம்

வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். 5 நாள் சோதனையில் சிக்கிய பல சொத்து ஆவணங்களில், சசிகலா ஒரு பங்குதாரராக இருப்பதை வருமான வரி துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது…

Read More

தேர்தல் பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: கோடநாடு மேலாளரிடம் 6 நாள் விசாரணை – திவாகரன், கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

தேர்தல் பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: கோடநாடு மேலாளரிடம் 6 நாள் விசாரணை – திவாகரன், கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்ஸன் எஸ்டேட்டில் 6 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையின்போது சட்டப் பேரவைத் தேர்தலின்போது தொகுதிகளுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் அதிகாரிகள் 6 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலா குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 187 இடங்களில் 1,800-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்றது. முக்கியமான…

Read More

ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சேவகர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடிபழனிசாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்க சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை தொடங்கி வைக்க வந்திருக்கிறேன், தமிழக அரசு செஸ் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சி திறந்து கொண்டு இருக்கின்றது விரைவில் இதற்காக மக்களை மற்றும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்….

Read More

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை

டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை

சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர்கள் டி.டி.வி.தினகரன், இளவரசி யின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா மற்றும் உறவினர்கள் வீடு உள்பட மொத்தம் 187 இடங் களில் இந்த சோதனை நடந்தது. சென்னை மட்டும் அல்லாமல் திருச்சி, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சசிகலா உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இது தொடர்பாக விசாரணைக்காக வருமான வரித்துறை அவர்கள் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வரவழைத்து திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படாத மேலும் 3…

Read More

‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை

‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில்  விசாரணை

வருமான வரித் துறையினரின் பிடியில், சசிகலா சிக்குகிறார். இத்துறையின் அதிரடியில் சிக்கிய அவரின் உறவினர்கள், ‘இனிமேல் தாங்காது’ என்பது போல், ‘போட்டுக் கொடுத்த’ தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில் விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சசி குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த, ஐந்து நாள் சோதனையில் அள்ளிய, 1,430 கோடி ரூபாய் ஆவணங்கள் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்! சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, ‘டிவி’ மற்றும், ‘மிடாஸ்’ மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நவ., 9 முதல் ஐந்து நாட்கள்,…

Read More

பல்லவன் இல்லம் மட்டுமின்றி 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக:போக்குவரத்து அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

பல்லவன் இல்லம் மட்டுமின்றி 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக:போக்குவரத்து அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை அடமானம் வைத்தது திமுக தான் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது: பல்லவன் இல்லம் மட்டுமில்லாமல் மேலும் 6 இடங்களை ரூ.30.50 கோடிக்கு அடமானம் வைத்தது திமுக. அதிமுக ஆட்சியில் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டது, பராமரிப்புகளுக்காக மட்டும் 53 விருதுகளை தமிழக அரசு பெற்றது. திமுக ஆட்சிக்காலத்தில் புதிதாக திறக்கப்பட்ட பணிமனைகள் 10 மட்டுமே. அதிமுக ஆட்சியில்போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ 10,519 கோடி நிதி வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் ரூ 1,231 கோடி நிலுவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம்

ஒவ்வொரு தாலுகாவிலும் சிறுநீர் வங்கி யூரியா தயாரிக்க திட்டம்

”நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலும், ‘சிறுநீர் வங்கி’யை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. சிறுநீரிலிருந்து யூரியா தயாரிப்பதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூரியாவின் அளவை கணிசமாக குறைக்க முடியும்,” என, மத்திய அமைச்சர், நிதின் கட்கரி கூறியுள்ளார். சிறுநீர் வங்கி,Urine bank, யூரியா, Urea, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ,Union Minister Nitin Gadkari, விவசாயிகள், Farmers, ஸ்வீடன், Sweden, நைட்ரஜன் ,Nitrogen, பாஸ்பரஸ் ,Phosphorus, பொட்டாசியம்,Potassium,தாலுகா, Taluka, மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நம் நாட்டு விவசாயிகள், யூரியா உரத்துக்கு, வெளிநாடுகளை…

Read More

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா?- வருமான வரி சோதனைகள் குறித்து டிடிவி தினகரன் ஆவேசம்

அரசியல்வாதி என்றால் பிளாட்பாரத்தில் தான் இருக்க வேண்டுமா? 1800 அதிகாரிகளை வைத்த வருமான வரித்துறை சோதனை நடத்துவது எதற்காக. இந்த சோதனைகளின் பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆவேசமாக பேட்டியளித்தார். சசிகலா உறவினர் வீடுகள் உட்பட 40 இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் இன்று (சனிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியதாவது: ‘‘வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைபற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்….

Read More

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

தினகரனின் ஆஸ்தான ஜோதிடர் ரூ. 3 கோடிக்கு வீடு கட்டியது எப்படி? கோடி கணக்கில் பங்கு சந்தையில் முதலீடு

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். பிரபல ஜோதிடர். இவர் நடிகர்கள் மற்றும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் குடும்பத்துக்கு ஆஸ்தான ஜோதிடராக பல ஆண்டுகாலமாக இருந்துள்ளார். அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் பங்கு சந்தை புரோக்கராகவும் இருந்து வந்தார் இந்த நிலையில் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 9-ந் தேதி மாலை 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட் டது. அங்கிருந்த கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடு பத்திரங்கள் சிக்கின. நேற்று 2-வது நாளாகவும் அவரது வீட்டில்…

Read More

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 150 வங்கி கணக்குகள் முடக்கம் ; ரூ1500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சசிகலா குடும்பத்தினரையும் அவரது ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வருமான வரி துறையினர் ஒரே நேரத்தில் 190 இடங்களில் தங்கள் சோதனையை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது. இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. விவேக்கின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை நடைபெற்றபோதே அன்றிரவு அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகளுடன் தகராறு செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விவேக்கின் வீட்டுக்கு வரும் ஆதரவாளர்களைத்…

Read More
1 125 126 127 128 129 181