போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறதா அரசு?- அன்புமணி

மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதியத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப்…

Read More

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை: மக்களுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

யுனெஸ்கோ படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பு பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகர மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது உயர்ந்த கலாச்சாரத்தில் சென்னையின் பங்களிப்பு மிகவும் மதிப்பானது. யுனெஸ்கோ தனது படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது. இது இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய தருணம். சென்னை மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு முதல்வர் கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2004-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, படைப்பாற்றலை காரணியாகக் கொண்டு நிலையான வளர்ச்சியை எய்திட…

Read More

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

வருமான வரி சோதனைகளால் அஞ்சிவிட மாட்டேன்; மத்திய அரசின் சதி எடுபடாது: டிடிவி தினகரன்

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், சசிகலாவின் உறவினர்கள் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று (நவ.9) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனைக்குப் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் 150 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அடையாறில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பல்வேறு கேள்விகளுக்கும் பதில அளித்தார். “எனது வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. காலை 8.30 மணியளவில் அதிகாரி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவரும் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். திரும்பி…

Read More

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும் இருமுறை பைபிள் வாசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் லாசரஸ் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, வைகோ “நான் கிறித்துவனல்ல. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார். லாசரஸ் பேசும் வீடியோவில், வைகோவும் அவரது குடும்பத்தாரும் கிறித்துவர்களாக மாறிவிட்டதாகவும், இயேசுவின் சேவைக்கு அவர்கள் தம்மை அர்பணித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். “அவரது மகளும், மாப்பிள்ளையும் கிறித்துவர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்….

Read More

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

சசிகலாவின் கணவர், குடும்பத்தினர் வீடுகளில் ஐடி ரெய்டு

தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். * சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு, * ஈக்காடு தாங்கலில் உள்ள…

Read More

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தமிழகத்தில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிஅதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்…

Read More

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது: நிர்மலா சீதாராமன்

மற்றவர் இயக்கும் கருவியாக இருந்து ஆட்சியை நடத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்கத்தை விமர்சிப்பது வேதனையளிக்கிறது என நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு, சட்டபூர்வ பணக்கொள்ளை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே? பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வர்ணித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அவர் பிரதமராக இருந்தபோது தான் பல்வேறு துறைகளிலும் பெரும் ஊழல்கள் நடந்தன. நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் என…

Read More

மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார். தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்தார். அங்கும் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். பின்னர் தமிழக மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம், பிரதமர்…

Read More

மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி பாராட்டு

மக்களின் மனசாட்சியாக விளங்கும் ஊடகங்கள்: தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி பாராட்டு

ஊடகங்கள் மக்களின் மனசாட்சியாக விளங்குகின்றன, சமூக மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு மகத்தானது என தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தினத்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பவள விழா மலரை வெளியிட்டு, தமிழறிஞர்களுக்கு விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார். பி்ன்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ‘‘75 ஆண்டுகாலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தினத்தந்தி நிறுவனத்திற்கும்,…

Read More

தமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

தமிழக அறிவு ஜீவிகளின் ஆலோசனையால்தான் மோடி- கருணாநிதி சந்திப்பு நடந்தது: சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

மோடி கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் ஒன்றுமில்லை அது தமிழ்நாட்டில் உள்ள அறிவு ஜீவிகள் சிலரின் ஆலோசனை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி தனது பயணத் திட்டத்தில் இல்லாத புது நிகழ்வாக திடீரென திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையாளர் மற்றும் பாஜகவில் உள்ள சிலர் இந்த சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ள சூழ்நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள்…

Read More
1 126 127 128 129 130 181