நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு கசாயம் பற்றிய வதந்திகளை பரப்பும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில்…

Read More

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? – ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது. ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டன. ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள பணக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், அங்கிருந்து பல்வேறு…

Read More

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது: தமிழிசை

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது: தமிழிசை

‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் இன்று கரூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது, ”டெங்குவை தடுக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘மெர்சல்’ பட விவகாரம் சுபத்துடன் முடிந்துவிட்டது. திருமாவளவனின் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினையும் தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுப்போம். எனது செல்போனுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. இதனைக்கண்டு நான் பயப்படப் போவதில்லை. விமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும்” என்று தமிழிசை…

Read More

கறுப்பு பணம் எதிர்ப்பு தினம்: ஜெட்லி தகவல் – நவ.8

கறுப்பு பணம் எதிர்ப்பு தினம்: ஜெட்லி தகவல் – நவ.8

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் நவம்பர் 8 ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக பா.ஜ., கொண்டாடும். கறுப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நடவடிக்கை கூட எடுத்தது கிடையாது. அக்கட்சி பல முறை ஆட்சியில் இருந்த போதும், கறுப்பு பணத்திற்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை. அக்கட்சி தலைவர்கள் சுய நலம் காரணமாக ரொக்க பொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். ரூபாய்…

Read More

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது ராகுல் எங்கேபோனார்?- தமிழிசை கேள்வியும் குஷ்புவின் பதிலும்

தமிழின் பெருமை பற்றி பேசும் ராகுல் இலங்கையில் இனஅழிப்பு போர் நடத்தியதற்கு காங்கிரஸ் துணைபோன போது எங்கே போனார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு குஷ்பு பதிலளித்துள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏன் மேடம், அரைச்ச மாவே திரும்ப திரும்ப அரைக்கறீங்க. இதில் மெர்சலைப் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதனால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அதற்கும் நீங்கள் பேசுவதற்கும் என்ன சம்மந்தம். நிஜப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவோம். எங்களிடம் மோடி இருக்கிறார், டிரம்பால் கூட எங்களை எதுவும் செய்ய முடியாது என்று சொன்ன அதிமுக அமைச்சருக்கு பதில் சொல்லுங்கள். தமிழகத்தின் உண்மையான பிரச்சினை டெங்கு. அது பலரை தினம்…

Read More

விஜய் நடித்த ‘மெர்சல்’ மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது

விஜய் நடித்த ‘மெர்சல்’ மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறது

மெர்சல் படத்தை விமர்சித்து வரும் பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘‘பராசக்தி திரைப்படம் தற்போது வெளியாகி இருந்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள். அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும்’’ என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். . இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி பற்றிய வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். பாஜகவினரின் இந்தக் கோரிக்கையை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘‘பாஜகவினர் மெர்சல் படத்தைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். பராசக்தி…

Read More

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு அற்புதம்மாள் கடிதம்

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பை மேலும் 30 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் ஜெயிலில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாயார் அற்புதம்மாள், பேரறி வாளனின் தந்தை ஞான சேகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு(பரோல்) வழங்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்து ஆகஸ்டு 24-ந்தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பல்வேறு நிபந்த னைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கினார். கடந்த…

Read More

ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ஸ்ரீநகர்: ராணுவத்தினரை எனது குடும்பமாக கருதி தீபாவளி கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடி வருகிறார். முன்னதாக கடந்த 2014ல் காஷ்மீரில் தீபாவளியை கொண்டாடினார். 2015 ம் வருடம் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும், 2016ம் வருடம் இமாச்சல பிரதேசத்திலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார். இதன்படி, இந்த வருடம் தீபாவளியை எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள காஷ்மீரின் குரேஸ் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக ஸ்ரீநகர் வந்த பிரதமரை, ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்றார். அங்கிருந்து பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பகுதிக்கு…

Read More

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

லக்னோ: உ.பி. மாநிலம் அயோத்தியில் 2 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள உள்ளார் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உபி., மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று அயோத்தியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ராமர், சீதை, லட்சுமணர் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டனர். இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில்.உ.பி.யில் பா.ஜ. 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. ராமாயணத்தில் ராமர் 14…

Read More

முகலாய மன்னர்கள் துரோகிகள்; தாஜ்மஹால் கதை கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?- பாஜக எம்.எல்.ஏ.,வின் பேச்சு

முகலாய மன்னர்கள் துரோகிகள்; தாஜ்மஹால் கதை கொண்டாடப்பட வேண்டிய வரலாறா?- பாஜக எம்.எல்.ஏ.,வின் பேச்சு

“முகலாய மன்னர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கதையையா வரலாறு எனக் கொண்டாடுவது” என பாஜக எம்.எல்.ஏ., சங்கீத் சோம் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்குச் சென்ற சங்கீத் சோம், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்த பாபர், அக்பர், அவுரங்கஜீபை நாம் வரலாறு என்ற பெயரில் மகிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் துரோகிகள். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாளர்கள் மஹரானா பிரதாப், சிவாஜி பற்றி பள்ளி, கல்லூரிகளில் பயிற்றுவிக்க வேண்டும். வரலாற்றுப் புத்தகங்களில்…

Read More
1 128 129 130 131 132 181