முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு

கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், காலை 6 மணி முதல் சோதனை . சுமார் 12 மணி நேரம் நடைபெற்று வந்த இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் ஒரு இடத்திலும், கோவையில் 2 இடங்களில் தற்போது சோதனை நிறைவடைந்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் ஈடுபட்டுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச…

Read More

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

Read More

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும்…

Read More

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு. டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Read More

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

நடப்பு மாதத்தில் 3வது அலை: ஐஐடி வல்லுநர்கள் எச்சரிக்கை

பஇந்தியாவில் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கோவிட் 3வது அலை தொடங்க வாய்ப்புள்ளது. தினமும் ஒரு லட்சம் பேருக்கு குறையாமல் பாதிக்கப்படுவர்; அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை பாதிக்கப்படலாம்’ என, ஐஐடி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஐதராபாத் ஐஐடி ஆய்வாளர்கள் மதுகுமளி வித்யாசாகர், கான்பூர் ஐஐடி ஆய்வாளர் மனிந்திரா அகர்வால் இருவரும் கணித முறை அடிப்படையில், கோவிட் 3வது அலையை கணித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் மதுகுமளி வித்யாசாகர் கூறுகையில், ‘கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, 3வது அலை நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஏற்பட்டால் அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனால், 2வது அலையைப் போல், 3வது அலையில் பாதிப்பு, உயிரிழப்பு…

Read More

உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – தேர்தல் கவரேஜ்

உபி தேர்தல் உண்மை நிலவரம் – பாரத் மார்க் உத்திரப்பிரதேசம் முழுவதிலுமிருந்து மக்கள் மண துடிப்பை உங்களுக்காக ஒரு சிறப்பு தேர்தல் கவரேஜ் கொண்டு வருகிறோம் !! மிக பெரிய பெரும்பான்மை பெற்று பிஜேபி யின் ” உ பி யின் முதல்வர் யோகி ” மீண்டும் வரும் தேர்தலில் வெல்வாரா ? உபி யாரைத் தேர்ந்தெடுக்கும்? பாரத் மார்க் யூடியூப் சேனலை சப்சிகிரைப் செய்து உபி மக்களின் துடிப்பை இப்போது அறிந்து கொள்ளுங்கள் ? https://www.youtube.com/bharatmarg ? எங்கள் வேலையை ஆதரித்து நன்கொடை அளித்து “உபி தேர்தல் உண்மை நிலவரம்” நிகழ்சியில் உங்கள் கேள்விகளை கேட்கவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும் ? https://bharatmarg.com/donate-now/…

Read More

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை: தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் பரவல் 2வது அலையின் போது ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால், அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே மாதம் முதல் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டது. ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம்…

Read More

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’ சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குக் காரணமான 3 விஷயங்கள்’  சீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்கு கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை’ என அக்கட்சியின் மூத்த நிர்வாகி பேசியுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அடைந்த தோல்விக்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் 7ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள், பா.ஜ.கவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், “பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக இழந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக நல்ல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சென்ற காரணத்தால் நமக்கு நல்ல…

Read More

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?

இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோவிட் 2வது அலையின் தாக்கம் குறைந்து தொற்று எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் உள்ளது. ஆனால், கேரளாவில் மட்டும் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் தொற்று பாதிப்பு பதிவாகிறது. இதனால் கேரளாவில் கோவிட் தொற்றுப் பரவல், அரசின் கையை மீறிச் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணைக் கண்காணிப்பாளர் மருத்துவர் சந்தோஷ் குமார் தெரிவித்து உள்ளதாவது:கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு உள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9 சதவீதமாகும். மற்ற எந்த மாநிலத்தையும்விட இது…

Read More

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை – சவுதி அரேபியா

கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன….

Read More
1 50 51 52 53 54 181