டில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம்

டில்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம்

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா் காயமுற்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர்…

Read More

விவசாயிகள் போராட்டம் குறித்து பொய் செய்தி விளியிட்ட இந்தியா டுடே டி.வி.செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மீது நடவடிக்கை !!

விவசாயிகள் போராட்டம் குறித்து பொய் செய்தி விளியிட்ட இந்தியா டுடே டி.வி.செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மீது நடவடிக்கை !!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழந்ததில் பலியாயானர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சானல்களில் ஒளிரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், , நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர். உடனே தவறாக செய்தி ஒளிபரப்பியதை சர்தேசாய் ஒப்புக்கொண்டார் இதையடுத்து இந்தியா டுடே செய்தி சேனல் நிர்வாகம்…

Read More

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

டில்லியில் விவசாயிகள் பேரணியில், அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கிய கொடி ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட காலிஸ்தானி சீக்கிய தீவிரவாதிகள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசாருக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, சிலர் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் பேரணி நடத்தினர். டில்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை வரை நுழைந்து, அங்கு சீக்கிய மத கொடியை ஏற்றினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போது வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. டில்லியின் சாந்திவன் ரெட் லைட் பகுதியில் ஆயிரகணக்கானோர் கூடியதுடன், தடுப்புகளை டிராக்டர் மூலம் தகர்த்தனர். போலீசாரை தாக்கிவிட்டு…

Read More

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?

தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுபவர் டாக்டர் கபீல் கான். அப்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், 9 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான…

Read More

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்

‘தி.மு.க.,வை, ஹிந்து விரோதக் கட்சி என்று, மாயத் தோற்றத்தை உருவாக்க, பா.ஜ., முயற்சிக்கிறது’ என, கண்டனம் செய்திருக்கிறார் ஸ்டாலின்! ‘ஹிந்து என்றால் திருடன்’ என்று விளக்கம் அளித்தவர், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி.’ஹிந்து மதத்தில் இருக்கும் திருமணச் சடங்குகள் ஆபாசமானவை’ என, அடித்துச் சொன்னவர், இதே ஸ்டாலின் தான். முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போன ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல், கீழே கொட்டி அவமானப்படுத்தினார். காஞ்சிபுரம் கோவிலில் அர்ச்சகர் ஒருவர், தன் நெற்றியில் வைத்த சந்தனத்தையும் விபூதியையும் உடனே அழித்து, தன் ஹிந்து விரோத செயலை பகிரங்கப்படுத்தினார். திருச்சியில் வழங்கப்பட்ட, கும்ப மரியாதையை ஏற்க மறுத்தார், ஸ்டாலினின் மகன் உதயநிதி. இப்படி கருணாநிதி,…

Read More

எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!

எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!

எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. சீனா இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடக்கிறது. மேலும் எல்லையில் சீன ராணுவத்தினர் அதிகளவில் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பிரச்னையை தீர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் பேசுகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு சிக்கிம் எல்லையில் நகு லா என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதில்…

Read More

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பா.ஜ.,எம்.பி.,கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் ஐந்து லட்சத்து 25 ஆயிரம் கிராமங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே அறிவித்துள்ளது. நிதி திரட்டுவது தொடர்பாக பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கியுள்ளது. டில்லி மாநில பாஜ.,வும் நிதி திரட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக உள்ளது. இதற்காக ரூ.10, 100,1,000 மதிப்புள்ள கூப்பன்களை தயாரித்து வீடுகளில் வழங்கி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ.,எம்.பி., கவுதம் காம்பீர், தனது பங்களிப்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read More

ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? – ராகுலுக்கு நட்டா கேள்வி

ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? – ராகுலுக்கு நட்டா கேள்வி

ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் வந்து ராகுல் நேரில் பார்த்து சென்ற நிலையில், “அதிகாரத்தில் இருந்த போது உங்கள் கட்சி ஜல்லிக்கட்டை தடை செய்து, தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்” என்று பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் இன்று வேளாண் சட்டங்கள், லடாக் பிரச்னை உள்ளிட்டவை சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். முன்னதாக அவருக்கு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா டுவிட்டர் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். “தனது மாத விடுமுறையிலிருந்து திரும்பி வந்துள்ள ராகுலிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: அருணாச்சல பிரதேசம்…

Read More

சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை – முதல்வர் இ.பி.எஸ்

சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை – முதல்வர் இ.பி.எஸ்

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவை புறக்கணிக்கும் வகையில், ‘அவரால், நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்’ என, முதல்வர் இ.பி.எஸ்., பகிரங்கமாக கூறியுள்ளது, ஆளும் கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன், ‘ஆளுமை மிக்க தலைவராக, முதல்வர் இ.பி.எஸ்., திகழ்கிறார்’ என்ற, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பாராட்டு பேச்சும், அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இம்மாத இறுதியில், பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை வரும் சசிகலாவுக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், சசிகலாவை புறக்கணித்து, அவரை சேர்க்காமல், அ.தி.மு.க.,வை வழி நடத்திச் செல்ல, முதல்வர் இ.பி.எஸ்., விரும்புகிறார். அதற்கு முத்தாய்ப்பாக, ‘சசிகலாவால் நான் முதல்வராகவில்லை; எம்.எல்.ஏ.,க்களால் தான் முதல்வரானேன்’ என, இ.பி.எஸ்.,…

Read More

ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும். இதனை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை கவனிக்கிறது. ரூ.20,000-க்கு மேல் நன்கொடை கிடைத்தால் அவற்றை காசோலையாக பெறுவது என முடிவு செய்துள்ளனர். நன்கொடையாக பெறும் பணத்தை 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை ஆன்லைன் நன்கொடை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் முன்னணி அமைப்பான…

Read More
1 59 60 61 62 63 181