தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !! கனிமொழியின் ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!

தி மு கா வின் கூட்டத்தில் திகுடு தத்தம் !!  கனிமொழியின்   ‘செட்டப்’ நாடகம் அம்பலம் !!

தர்மபுரி அருகே, ஏரியூர் மக்கள் கிராம சபை கூட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண் ஒருவரை பேச செய்து, ஓட்டு வங்கியை தக்க வைக்க, தி.மு.க., நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஏரியூரில், நேற்று நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். தி.மு.க., ஆலோசனை நிறுவனமான, ‘ஐபேக்’ அமைத்து கொடுத்த அரங்கில், அவர்களால் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, தி.மு.க., கொடி பொறித்த தொப்பி வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட பெயர்களை சொல்லி அழைக்க, அவர்கள் கேள்வி கேட்க, கனிமொழி பதில் கூறினார். நிகழ்ச்சி முடிய, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்த, ஏரியூர்,…

Read More

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு,” என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறியுள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், தனியார், ‘டிவி’ ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த, 2018ல், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து, அப்போது கட்சியின் தேசிய தலைவராக இருந்த, அமித் ஷாவை சந்தித்தோம். கட்சியின் வட கிழக்கு பிராந்திய செயலர் அஜய் ஜாம்வாலும் உடனிருந்தார். நாட்டின் பல மாநிலங்களில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது குறித்து, அஜய் ஜாம்வால் குறிப்பிட்டார். அதற்கு, ‘நேபாளம், இலங்கையிலும் பா.ஜ.,வுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும்’…

Read More

பிரபலமாகும் KOO செயலி – அரசியல்வாதிகளும்… சினிமா பிரபலங்களும் ட்விட்டரை விட்டு கூ வுக்கு தாவல் !!

பிரபலமாகும் KOO செயலி – அரசியல்வாதிகளும்… சினிமா பிரபலங்களும் ட்விட்டரை விட்டு கூ வுக்கு தாவல் !!

ட்விட்டரின் இடுகைகள் பதிவு அம்சங்களை கொண்டதாக கூ செயலி அறிமுகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்த செயலி அறிமுகமானது. இதை போம்பிநெட் டெக்னாலஜிஸ் என்ற பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இந்த செயலியை உருவாக்கியவர்கள் அபமேய ராதாகிருஷ்ணன் மற்றும் மயங்க் பித்வக்தா. இருவரும் இந்தியர்கள். கூ செயலி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கிறது. பிளேஸ்டோரில் இதுவரை இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். கூ செயலி, தனது இணையதளத்தில் “இந்தியாவில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள். சுமார் 100 கோடி பேருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களின் கரங்களில் செல்பேசி இருக்கிறது. இன்டர்நெட்டில் பெரும்பாலானவே…

Read More

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை – முதல்வர் யோகி ஆதித்யநாத்

புதிய உ.பி.,யில் மாபியாக்களுக்கு இடமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாக தெரிவித்துள்ளார். காஸிப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கும், மாபியா கலாச்சாரத்தினை ஒழிக்க எனது அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. முந்தைய அரசு, கிரிமினல்களையும், மாபியா கலாசாரத்தையும் வளர்த்ததினால் தான், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. புதிய உ.பி.,யில், மாபியாக்கள், கிரிமினல்கள், சமூக விரோத சக்திகளுக்கு இடமில்லை. வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மாபியா கலாசாரத்தை ஒழிப்பதிலும் அக்கரை காட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

காலிஸ்தான் பயங்கரவாதி அதரவாளர்களின்  டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டில்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் போராட்டம் தொடர்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும்…

Read More

கிறிஸ்டின் மிஸ்ஸானரி காருண்யா’வின் சட்டவிரோத கட்டுமானங்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்

கிறிஸ்டின் மிஸ்ஸானரி காருண்யா’வின் சட்டவிரோத கட்டுமானங்கள்! அதிர்ச்சி தகவல் அம்பலம்

கோவை அருகே காருண்யாநகரில், காளான் போல் பெருகிவரும் தேவாலய கட்டுமானங்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. கோவை அருகே காருண்யா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அந்தந்த ஊராட்சிகளின் ஒப்புதல் இல்லாமலேயே காளான் போல் பெருகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை மனுவை தாக்கல் செய்த வக்கீல் ரங்கராஜு கூறியதாவது:கோவை மாவட்டம், மத்வராயபுரம், பூலுவபட்டி, இக்கரை போளுவாம்பட்டி, ஆலாந்துறை ஊராட்சிகள் மற்றும் அவற்றை சுற்றிலும், கடந்த 10 ஆண்டுகளில், பல புதிய தேவாலயங்கள், பிரார்த்தனை மண்டபங்கள்…

Read More

இந்தியாவுக்கு எதிராக வெளி நாடுகளிலிருந்து சதி – ஜிஹாதி – காலிஸ்தானி தீவிரவாதிகளின் திட்டம் முசிறியடிக்கப்படும் !!

இந்தியாவுக்கு எதிராக வெளி நாடுகளிலிருந்து சதி – ஜிஹாதி – காலிஸ்தானி தீவிரவாதிகளின் திட்டம் முசிறியடிக்கப்படும் !!

‘சர்வதேச அளவில், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பிரசாரம் நடந்து வருகிறது’ என, எச்சரிக்கும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாய சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல வெளிநாட்டு பிரபலங்கள், சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.’பிரச்னை குறித்து முழுமையாக தெரியாமல், பொய்த் தகவலின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என, மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டாதம்பர்க், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அது குறித்து தகவல்கள் அளிக்கும், ‘டூல்கிட்’ என்ற தொகுப்பையும் அவர் வெளியிட்டார். அதை தன் பதிவில் இருந்து நீக்கிய அவர், புதியடூல்கிட்…

Read More

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை என அமெரிக்க பாடகி ரிஹானா கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘யாரும் பேசப்போவதில்லை’ என்றும் ‘அவர்கள் விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்’ எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்ததால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா…

Read More

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி பட்ஜெட்டில் திருக்குறள் !!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அதிரடி பட்ஜெட்டில் திருக்குறள் !!

நடப்பு பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இது நிர்மலாவின் தமிழ் ஆர்வத்தை காட்டுவதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர். 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லியில் இன்று (பிப்.1) தாக்கல் செய்து உரையாற்றினார். சென்ற ஆண்டு பட்ஜெட் உரையின் இடையே திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது அனைவரும் பாராட்டினர். கடந்த பட்ஜெட்டில், ‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’ – என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். ‛நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு,’ என்பதே இதன் விளக்கமாகும். அவரின் தமிழ் ஆர்வம்…

Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கொலையாளிகள் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு – கொலையாளிகள் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More
1 58 59 60 61 62 181