அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை
இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. பாகிஸ்தான், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக…
Read More









