முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் எங்கே? பா.ம.க

முரசொலி இடம் தொடர்பான விவகாரத்தில், மூலப்பத்திரம் உட்பட அனைத்து ஆவணங்களையும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்திருந்தால், ‘முரசொலி’ நிலம் குறித்த பட்டாவை, எவ்வளவு வேகமாக வெளியிட்டாரோ, அதே வேகத்தில், மூல ஆவணங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். முரசொலி நிலம் குறித்த சர்ச்சைக்கு, அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.மூல ஆவணங்களை வெளியிட, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தியும், வெளியிட ஸ்டாலின் மறுப்பது ஏன்? சென்னை அறிவாலயம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், தி.மு.க., அலுவலகம் அமைக்க, முறைகேடாக வளைக்கப்பட்ட இடங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்

Read More

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

கர்தார்பூர்: இந்தியா-பாக்., ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில், சீக்கியர்களின் பழமையான குருத்வாரா உள்ளது. சீக்கிய குருவான, குரு நானக்கின் நினைவிடமும் இங்கு உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏராளமான சீக்கியர்கள், கர்தார்பூருக்கு வழிபாட்டுக்காக செல்வது வழக்கம். இதையடுத்து, பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, சாலை அமைக்க, இரு நாடுகளும் முடிவு செய்தன. நீண்ட இழுபறிக்கு பின், இந்த பணிகள், சமீபத்தில் முடிவடைந்தன. இந்நிலையில், இந்த கர்தார்பூர் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை சர்வதேச எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தரப்பில் மத்திய…

Read More

ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி – பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி

ஹரியானாவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி – பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி

ஹரியானாவில் பா.ஜ.,- ஜே.ஜே.பி., கூட்டணி முடிவானது. இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று இரவு நிருபர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில்: துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை கவர்னரிடம் நாளை தெரிவிப்போம். மேலும் ஜே.ஜே.பி., கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பை வழங்குவோம் என்றும் கூறினார். நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் சுயேட்சை 6 இடங்களிலும், ஜனநாயக ஜனதாகட்சி 10 இடங்களிலும் வெற்றி…

Read More

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக.,வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்ற தொகுதியில் கூட அதிமுக.,வுக்கு மக்கள்…

Read More

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல்

கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். விரைவில் போராடி இதில் இருந்து வெளியே வருவோம் என டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை சந்தித்த, காங்., இடைக்கால தலைவர் சோனியா ஆறுதல் கூறி உள்ளார். வருமான வரித்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் செப்., மாதம் சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 23 வயதாகும் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2013 ல் ரூ.1 கோடியாக இருந்த ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு 2018 ல் ரூ.100 கோடிக்கும் மேலாக அதிகரித்தது எப்படி என…

Read More

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 7 சதவீதமாக உயரும் – பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஏற்கனவே ஐஎம்எஃப் கூறியிருந்தது. தற்போதுள்ள மந்தநிலை சுழற்சி முறையில் ஏற்படக் கூடியதுதான். இந்தியாவில் பல துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 6.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஊரக வருவாய் வளர்ச்சி பலவீனமாக உள்ளதோடு, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் துறைகளில் பாதிப்புகள் உள்ளன. இந்த காரணிகள் முதலீடு, நுகர்வு ஆகிய இரு அம்சங்களிலும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பு மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகள் சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

Read More

சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பா.ஜ., வே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்; மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.,166 முதல் – 194 , காங் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் அரியானாவில் மீண்டும் பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்க…

Read More

நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி – சீமான்

நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். நாங்குநேரி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வரும் அக்., 21ல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். சீமான் பேசுகையில், என்னை எதிர்க்கிறவன் எல்லாம் என் எதிரி அல்ல, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என்…

Read More

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு நலனுக்காகஎடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும். காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பா.ஜ., எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர் குறித்த…

Read More

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின. சேதமடைந்த சாலைகள் குறித்து சட்ட அமைச்சர் பி.சி.சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள சாலைகள் பா.ஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்களை போன்று பெரியம்மை வந்தது போல் உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா மற்றும் முதலமைச்சர் கமல் நாத்தின் உத்தரவின் பேரில், 15 நாட்களில்…

Read More
1 82 83 84 85 86 181