சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது

சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது. கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம் ஆகும். இந்த பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார். மாலை 6:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியும் இதே போன்று அழைத்து செல்லப்படுவார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை…

Read More

டுவிட்டரில் உளறிய ஸ்டாலின் – மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது

டுவிட்டரில் உளறிய ஸ்டாலின் – மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி  ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது

மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பதிவு நீக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பழனிசாமி உள்ளார். ஆணைய செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி செயல்பட்டு வந்தார். பேரூராட்சி இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இன்று(நவ.,14) அவர் பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆணைய செயலராக விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். செயலர் மாற்றம் பற்றிய தகவல் வெளியானதும் ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கண்டன அறிக்கை பதிவிடப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு…

Read More

முதல்வர் இபிஎஸ் & துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதல்வர் இபிஎஸ் & துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் வீர பிள்ளைகளான முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர். சசிகலா அதிமுக.,வுடன் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் உயிரிழந்தார்

அரசியல்வாதிகளின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த டி.என்.சேஷன் உயிரிழந்தார்

இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் ஞாயிறன்று இரவு 9.30 மணியளவில் சென்னையில் தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. 1955ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்.. கடந்த தசாப்தத்தில் டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு பெயரைப் பெற்றதில்லை. இந்திய அரசியல்வாதிகள் கடவுளுக்கும் டி.என்.சேஷனுக்கும் மட்டுமே பயப்படுவார்கள் என 90களில் வேடிக்கையாகப் பேசப்பட்டது. சேஷனுக்கு முந்தைய தேர்தல் ஆணையர்கள் அனைவரும் அரசின் விருப்பப்படியே செயல்பட்டு வந்தனர். சேஷன்…

Read More

ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு

ஆட்சியமைக்க 2 நாள் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டதாக சிவசேனா குற்றச்சாட்டு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு, 105 இடங்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டணி கட்சியான சிவசேனா முதல்-மந்திரி பதவி கேட்டு பிடிவாதம் பிடித்ததால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தவ் தாக்கரேவின் மகனும் எம்.எல்.ஏவுமான ஆதித்ய தாக்கரே கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க விரும்புவதாக கவர்னரிடம் கூறினோம். ஆட்சி அமைக்க கூடுதலாக 48 மணி நேரம் அவகாசம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை ஆளுநர் நிராகரிக்கவில்லை. ஆனால், ஆட்சியமைக்க அவகாசம் தர மறுக்கிறார். மராட்டியத்தில்…

Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு எதிராக பேச உங்களுக்கு திராணி இருக்கிறதா?

இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் திமுக தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சித்தான் திமுக என்றும் பாஜகவின் தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுகவையும், அக்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @BJP4TamilNadu கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை…

Read More

சிவசேனாவுக்கு புது தலைவலி : ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவுக்கு புது தலைவலி : ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கு தங்கள் கட்சியின் ஆதித்யா தாக்கரேவை முதல்வராக நியமிப்பதற்காக பாஜ.,விடம் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக முன்னிறுத்த வேண்டும் என ஒரு தரப்பினர் குரல் எழுப்பி வருவதால், புது சிக்கலில் சிவசேனா தலைமை தவிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜ., – சிவசேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்றது. ஆனாலும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு முதல்வர் பதவி ஒதுக்க வேண்டும் என அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். இதனால், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தானே மாவட்ட எம்.எல்.ஏ.,வான ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா தரப்பில் முதல்வராக்க வேண்டும் என ஒரு…

Read More

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – கர்நாடகா முதல்வர் எடியூரப்பா

திப்பு சுல்தான் தொடர்பான அனைத்தையும் கைவிட உள்ளோம். திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ‘மைசூர் புலி’ என்று அழைக்கப்படும் திப்பு சுல்தான், ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனக் கூறி, காங்., கட்சி 2015 முதல் அவரின் பிறந்தநாளை (நவ., 10) கொண்டாடி வந்தது. ஆனால், அவர் ஒரு மதவாதி என பாஜ.,வை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கா்நாடக பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திப்பு சுல்தான் பற்றிய தகவல்கள் அனைத்தும் தவறானது. பலரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய அவர் சுதந்திர போராட்ட வீரரும்…

Read More

மஹாராஷ்டிராவில் தொடரும் இழுபறி ஏட்டிக்குப் போட்டி

மஹாராஷ்டிராவில் தொடரும் இழுபறி ஏட்டிக்குப் போட்டி

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே, ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ‘முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்குவது குறித்து, சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’ என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாக, ஆட்சியில் சிவசேனாவுக்கு சம பங்கு தருவதாக, முதல்வர் பட்னவிஸ் பேசிய பழைய, ‘வீடியோ’வை, சமூக வலைதளத்தில், சிவசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இங்கு ஆட்சி அமைக்க…

Read More
1 81 82 83 84 85 181