ப.சிதம்பரம்: ஆகஸ்ட் 30 வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கதுறை சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் (ஆக.,26) முடிவடைகிறது. இந்நிலையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி உள்ளது. ஆனால் சிதம்பரத்தின் ஜாமீன் கோரும் மனு இன்றும் (ஆக.26) பட்டியலிடப்படவில்லை. ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில், டில்லி ஐகோர்ட்…
Read More









