புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன்நிவாரணம் செந்தில் குமரன் சேகரித்த நிதி
புத்தூர் கிழக்கைசேர்ந்த 6 வயதுடையசயந்தன் பாஸ்கரனின் உயிர் காக்கும் நோக்கத்துடன் கடந்தஒக்டோபர் 18, 24, 25 ஆகியதிகதிகளில் கனடாகந்தசுவாமிஆலயத்தில் பக்தர்கள் அளித்தநன்கொடையின் மூலம் சேர்க்கப்பட்டநிதியான 5041.55 டாலர்கள்அவரின் இருதய சத்திரசிகிச்சைக்கு பயன்படப் போகிறதென்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு பெருமனதோடு ஒத்துழைப்பு நல்கி உதவி புரிந்த ஆலய நிர்வாக சபைக்கும்,அதன்; தலைவர் திருமுத்து அவர்களுக்கும்,தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ சிறிதோ அதை அப்படியே அள்ளித் தந்த முருகனின் அடியார்களுக்கு அந்த குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம். இந்த நிதி சேர்ப்பில் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! பின்குறிப்பு: இன்னும் பல ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் சிகிச்சைக்கு பணமின்றி…
Read More









