கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் பலர் மருத்துவம் பார்க்கவும், பிரிட்டன், கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களோடு சேர்ந்து வாழவும் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமானப் போக்குவரத்தை ரத்து செய்ததுடன் விமான நிலையங்களையும் மூடியது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இலங்கைக்கு அருகே இந்தியா இருப்பதால், இந்தியாவில் தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதி…

Read More

விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (09 ஏப்ரல் 2021) அதிகாலை 1.40 மணி அளவில் அவரைக் கைது செய்ததாக, யாழ்ப்பாணம் போலீஸார் உறுதிப்படுத்தினர். யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டனர். யாழ்ப்பாணம் மாநகரத்தின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும், வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்ற முறையில் மணிவண்ணன் நேற்று முன்தினம் (7 ஏப்ரல்) தெரிவித்திருந்தார்.

Read More

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில்  மக்கள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று…

Read More

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம் !!

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம் !!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. மரணமடைந்த மேற்படி பெண் புற்றுநோய் மற்றும் இதயக்கோளாறு ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடந்த 09 மாதங்களாக இந்தியா – வேலூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் உறவினர் றம்ஸான் என்பவர் பிபிசி தமிழிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி இவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க…

Read More

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளரும், இலங்கை தமிழ் திரைப்பட கலைஞருமான எஸ்.நடராஜசிவம் நேற்றிரவு காலமானார். நடா அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 74. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பிறந்த அவர் தனது 20ஆவது வயதுகளில் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ‘ரேடியோ சிலோன்’ வானொலி மூலம் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1980களில் இலங்கை சினிமாத்துறையிலும் கால் பதித்தார். ‘லாஹிரு தகசக்’ சிங்கள நாடகத்தின் ஊடாக 1985ஆம் ஆண்டு நாடக வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் யசோராவய, அவசந்த, வனஸபந்து, யுக விலக்துவ…

Read More

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்தார். இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

Read More

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் வாழ்ந்த மூத்த நாடகக் கலைஞர் நிர்மலா ரகுநாதன் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்

பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற மூத்த நாடகக் கலைஞரான திரைப்பட இயக்குநர் ஏ.ரகுநாதன் (நிர்மலா ரகுநாதன்) கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தார். இலங்கையில் 1960களின் ஒரு சில தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருந்த காலத்தில்  ‘நிர்மலா’ என்கிற திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டு நிர்மலா ரகுநாதன் என்று பெயர் பெற்றார். இவர் நாடக துறையிலும், சினிமா துறையிலும் இலங்கை தமிழரிடம் தன் முத்திரை பதித்தவர். இவர் நெஞ்சுக்கு நீதி, புதியகாற்று, தெய்வம் தந்த வீடு திரைப்படங்களிலும் பாத்திரமேற்று பெயர் பெற்றவர். பிரான்சில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த, இலங்கையின் இந்த மாபெரும் கலைஞனுக்கு உதயன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய   பிரார்தித்துக்கொள்கிறது.

Read More

‘உதயன்’ நண்பர் சோதி ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும் கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

‘உதயன்’ நண்பர் சோதி  ( நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் அவரின் துணைவியாரும்  கரோனாவால் இறைபதம் அடைந்தனர்

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்;றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றிவந்த திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) மற்றும் அவர்களின் துணைவியார் திருமதி சோதியும் ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினர். தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்ற இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம். சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது. நாம் கலங்கிப் போய் உள்ளோம்….

Read More

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும் : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும்   : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் . இது யசோத மாயாவுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல் போல அமைந்திருக்கும் அழகான கிருஷ்ண பக்தி பாடல். கிருஷ்ணா வெய்யில் நேரத்தில் வெளியே செல்வதையும், எல்லா வகையான ஆபத்துகளையும் நீர்கொள்வதையும் அம்மா தடுக்கப்பார்கிறார். ஆனால் மறுபுறம், கிருஷ்ணர் ஏன் நிச்சயமாக வெளியே செல்ல வேண்டும் என்று தனது அம்மா யசோதாவை சமாதானப்படுத்துகிறார், வழக்கம் போல் அவர் தனது வழியைப் பெறுகிறார். இந்த அழகான தமிழ் பாடலை கேட்டு ரசித்து பின் செல்வி வைஷ்ணவி மென்மேலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேற ஆசிர்வதித்து வாழ்த்துங்கள் !!  

Read More
1 2 3 4 14