தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து…

Read More

யாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

யாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

முதல்நாள் நிகழ்ச்சியில், வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார் ! புத்தர் சிலைகளையும், புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே, புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது ! அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி, புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும், வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார் ! ஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா? இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய, அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார் ! யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார் !…

Read More

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியுண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார். ஹப்புத்தளை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். விசாரணைகளின் பின்னரே விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட முடியும் என இலங்கை விமானப்படை…

Read More

இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750 !!

இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750 !!

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700…

Read More

ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் – இலங்கை பெண் பௌத்த துறவிகள்

ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் – இலங்கை பெண் பௌத்த துறவிகள்

”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,” என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ”பிக்குணிகள்” என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை…

Read More

கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது – பல பகுதிகளில் மண்சரிவு

கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது – பல பகுதிகளில் மண்சரிவு

வியாழக்கிழமை இரவு முதல் முதல் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார். மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதேபோன்று, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை…

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 21 நாடுகளை சேர்ந்தோர் இம்முறை போட்டியில் போட்டியிட்டுள்ளனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரே சமந்திகா குமாரசிங்க, ஒரு பிள்ளையின் தாயாவார். 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக அழகு கலை கலைஞராக முதல் முதலில் இந்த துறைக்குள் சமந்திகா குமாரசிங்க பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பல முன்னணி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். விளம்பரங்கள் மாத்திரமன்றி சில தொலைக்காட்சி…

Read More

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது. ‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று…

Read More

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் – குஜராத் போலீஸ்

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் – குஜராத் போலீஸ்

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் ‘யோகினி சர்வயக்ஞ பீடம்’ செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார்….

Read More
1 2 3 4 5 14