‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

‘முன்னாள் விடுதலைப் புலிகள்’ 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு

பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேரை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார். அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த 16 பேரும் முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது. ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அவர் தெரிவித்தார்….

Read More

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

கடல் மூலம் தமிழ்நாடு வந்து கனடா செல்ல முயன்ற 27 இலங்கையர் கைது

தமிழ்நாடு வழியாக சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 இலங்கை நாட்டவரை தமிழ்நாட்டின் கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு மக்களில் பலர் மருத்துவம் பார்க்கவும், பிரிட்டன், கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களோடு சேர்ந்து வாழவும் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு விமானப் போக்குவரத்தை ரத்து செய்ததுடன் விமான நிலையங்களையும் மூடியது. இதனால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இந்நிலையில் இலங்கைக்கு அருகே இந்தியா இருப்பதால், இந்தியாவில் தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதி…

Read More

இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை

இலங்கையில் கோவிட் பரவல், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்: அமெரிக்கா விடுக்கும் பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்றும் தீவிர பயங்கரவாதம் தொடர்பாகவும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தலில், இலங்கைக்கு செல்லும் முன்பு சில விஷயங்களை அமெரிக்கர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் தீவிரமாகும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டுக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் இந்த சுகாதார எச்சரிக்கையின் நிலை நான்காக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தூதரக அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. எவ்வித எச்சரிக்கைக்கும் இடம் கொடுக்காமல் இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து…

Read More

இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு – சீமான் கண்டனம்

இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழ் புறக்கணிப்பு – சீமான் கண்டனம்

இலங்கையின் அலுவல் பணிகளிலும், அரசின் செயல்பாடுகளிலும், நாட்டின் பாஸ்போட்டிலும் தமிழை முற்றாகப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இலங்கையின் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளாக சிங்களத்தோடு, தமிழும் இருக்கும் நிலையில் தமிழ் மொழியை முழுவதுமாக நிராகரித்து, இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கை அரசின் இனத்துவேசப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழும், தமிழர்களும் ஒதுக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்டு வரும் அதேவேளையில், சீனாவின் அதீத ஆதிக்கமும், அதிகப்படியான அத்துமீறலும் இலங்கையில் வெளிப்படையாக நிகழ்ந்தேறுவது இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் பேராபத்தாக முடியும் என்று உரைக்கிறேன். இன்றைக்கு எங்களது தாய் நிலத்திலேயே எங்களது தாய்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக தமிழர்கள்…

Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று (ஏப்ரல் 23) திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவுத்தூபி பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் காலையில் திறந்து வைக்கப்பட்டது. நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிக் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு உடைக்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக இந்த தூபியை தகர்த்திருந்த நிலையில், அன்றிரவு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில், அன்று முதல் தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வலுப் பெற்றன.

Read More

அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணுசக்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் ஏற்றிய சீனாவிற்கு சொந்தமான MV BBC Naples என்ற கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இப்போது இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறிவிட்டது என்று இலங்கை அரசு தரப்பு தெரிவிக்கிறது. இலங்கைக்குள் ரசாயன பொருட்களை விமானத்தின் ஊடாகவோ கப்பலின் ஊடாகவோ கொண்டு வருவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையிடம் அனுமதி பெறுவது அவசியமானது என எச்.எல்.அனில் ரஞ்சித் கூறுகிறார். எனினும், குறித்த கப்பல் எந்தவித அனுமதியும்…

Read More

இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு – 3 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு – 3 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியாவிடம் இருந்து பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர்…

Read More

இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!

இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு (மாலத்தீவு) ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கலந்துரையாடல்களுக்காக வருகைத் தந்த போதே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை விமானப்படை தனது 70வது நிறைவு ஆண்டை எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் தேதி கொண்டாடவுள்ள…

Read More

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்

இலங்கை மஹர சிறைச்சாலை கைதிகள் மோதல்: 11 பேர் பலி&106 பேர் காயம்

மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.  29ம் தேதி மாலை ஆரம்பமான மோதல் அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 106 கைதிகள் காயமடைந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காயமடைந்த கைதிகளுக்கு ராகமை மருத்துவமனை, வெலிகட சிறைச்சாலை மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்தும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிடுகிறது. அத்துடன், சிறு காயங்களுக்கு உள்ளான கைதிகளை சிகிச்சைகளின் பின்னர், மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் கோவிட்…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னல் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பு !!

இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னல் பாகிஸ்தானின் ஐஎஸ் அமைப்பு !!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்புள்ளமை குறித்து தகவல் உள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும், இலங்கையர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தம்மிடம் தகவல் உள்ளதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதா எனவும் ஹரின் பெர்ணான்டோ சபையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சரத் வீரசேகர, ஆம் என பதில் கூறினார்.  எனினும், ரகசியங்களை தற்போதைக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். சில சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலுள்ள சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்த வாய்ப்பு…

Read More
1 2 3 4 45