கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு !!

கொழும்பு, கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால் இது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று, ஞாயிற்றுக்கிழமை, மாலை நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்துள்ள கைதிகள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை திடீரென அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்காக களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட போலீஸ்…

Read More

இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன. கடந்த காலங்களில் மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அரசாங்கத்தினாலும், நீதிமன்றங்களினாலும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து…

Read More

கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன? மஹிந்த ராஜபக்ஷ

கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடலகள் தீயிட்டு எரித்ததில் தவறென்ன? மஹிந்த ராஜபக்ஷ

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அல் சப்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருந்தார். எனினும், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் அமைச்சரவையில் எட்டப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவங்க கூறியிருந்தார்….

Read More

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார். இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. “என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய…

Read More

இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்?

இலங்கையில் அதிக வீரியத்துடன் மீண்டும் கொரோனா பரவல்?

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பாவின் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை அண்மித்தே இந்த கோவிட் வைரஸ் பிரிவு பரவி வருகின்றமை, சர்வதேச தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழு குறிப்பிடுகின்றது. இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட…

Read More

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும். இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது…

Read More

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி போலீஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார். ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார். சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்…

Read More

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த…

Read More

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது…

Read More

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில்  மக்கள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று…

Read More
1 2 3 4 5 45